இந்தக் கடைசி நாட்களில் தேவனுடைய சத்தம் Phoenix, Arizona, USA 63-0120M 1இக்காலை வேளையில் மறுபடியுமாக இந்த ஸ்பானிஷ் மக்களின் நடுவில் வந்துள்ளது ஒரு பெரும்பேறு என்பது உறுதி. ஜிம்முக்கு இது கேட்கிறதா என்று வியக்கிறேன். ஓ, அவர் ஒலிப்பதிவு செய்து கொண்டிருக்கிறார். இதற்கு முன்னால் சகோ. கார்சியாவுடன் நான் இங்கு வந்திருந்தபோது, அந்த சிறு ஸ்பானிஷ் பாடகர் குழு பாடிய பாடல்களின் ஒலிப்பதிவு இப்பொழுதும் என்னிடமுள்ளது. அவர்கள் எனக்குப் பாடின அந்த சிறு பாடலை நான் மறந்துவிட்டேன். ஓ, ஆனால் நான் எவ்வளவாய் அதை ரசித்தேன். அதை பாடிய சிறுவர்கள் எல்லாரும் வளர்ந்து அவர்களுக்கு திருமணமும் நடந்து விட்டது. அவ்வப்போது அவர்கள் எனக்கு கடிதம் எழுதுகின்றனர். இன்று காலையில் நான் இங்கு வந்தபோது, சிறு ஜோசப்பைக் கண்டேன். உண்மையாகவே அது எனக்கு நல்லுணர்வை அளித்தது. உன்னைக் கண்டதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி இப்பொழுது ஸ்பானிஷ் மொழியில் ஒரே ஒரு வார்த்தையை என்னால் கூற முடியும். அதைக் கேட்க உங்களுக்கு விருப்பமா? ''அல்லேலூயா!'' அந்த வார்த்தையை என்னால் மறக்க முடியாது. ஒரு சமயம் ஒரு செவிட்டுப் பெண் நான் கூறுவதைக் கேட்க முயன்று கொண்டிருந்தாள். ஒருவேளை இந்த சொல்லை நான் தவறாகப் கூறலாம், பாருங்கள், ஆனால் எனக்கு ஞாபகம்உள்ள வரைக்கும், அது 'ஓய்கா'. அது சரியா? நான் கூறுவதைக் கேள், கேள், 'ஓய்கா'. பின்பு“க்ளோரியா அ டயாஸ்' என்னும் ஸ்பானிஷ் சொற்களை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன். மிகவும் அருமை! ஓ , நான் தலைநகரான மெக்ஸிகோ நகரத்துக்கு சென்று அங்கிருந்தவர்களுடன் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் எவ்வளவு மகிழ்ச்சி கொண்டேன்! மற்றும் நான்... 2இங்கிருந்து நான் பின்லாந்துக்கு சென்றேன். அப்போது, ஒரு சிறு பின்லாந்து பெண்ணிடம் பேசினது எனக்கு அடிக்கடி ஞாபகம் வரும். 'பெத்தானி' என்று அவர்கள் அழைக்கும் இடத்துக்கு என்னைக் கூட்டிச் சென்றார்கள்: ஒவ்வொரு தேசமும் தன் சொந்த கருத்தைக் கொண்டுள்ளது (உங்களுக்கு சத்தம் எதிரொலிக்கிறதா, நான் ஒலிபெருக்கிக்கு மிக அருகாமையில் இருக்கிறேனோ? நான் பேசுவது சரியாகக் கேட்கிறதா? இப்பொழுது எப்படியிருக்கிறது?). இந்த சிறு மாது அருமையானவள். ஆனால் அவள் என்னைப் போல் அதிகமாக பேச விருப்பம் கொண்டவள். அந்த மொழி பெயர்ப்பாளர்... அவள் மிக வேகமாகப் பேசினாள். ஆனால் அவள் கூற விரும்பினதை மொழி பெயர்ப்பாளரால் அவ்வளவு வேகமாக மொழி பெயர்த்துக் கூற இயலவில்லை. அவள் முகம் சிவக்க அங்கு நின்று, “இந்த ஆள் உளறுகிறார்'' என்றாள். ஆனால், உங்களுக்குத் தெரியுமா, பறவைகள் எல்லாம் ஆங்கிலத்தில் பாடுவதையும், நாய்கள் ஆங்கிலத்தில் குரைப்பதையும், குழந்தைகள் ஆங்கிலத்தில் அழுவதையும் நான் கவனித்திருக்கிறேன். நமக்கு என்ன நேர்ந்தது? நாம் ஒவ்வொருவரும் நமது மொழி தான்ஆயிர வருட அரசாட்சியின் போது பேசப்படும் மொழியாயிருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ள நமக்கு பரலோக மொழி ஒன்றுண்டு என்பது உண்மை. 3இன்று காலையில் சகோ. ரோ. (Bro. Rowe) இங்கு நம்முடன் இருக்கிறார். அவர் வாஷிங்டனில் அரசியல் நிபுணராக பணியாற்றுகிறார். அவர் ஐந்து அல்லது ஆறு ஜனாதிபதிகளிடம் பணி புரிந்திருக்கின்றார் என்று நான் நம்புகிறேன். அவ்வளவு பெரிய மனிதர் எனக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் போது, மேடையின் மேல் நின்று பேசுவது எனக்கு எப்படியிருக்கிறது தெரியுமா? அவருடைய சாட்சி எனக்கு தலை சிறந்ததாக விளங்குகிறது, முக்கியமாக அவர்... அவர் லூத்தரனாயிருந்தார் என்று நினைக்கிறேன். அதை நான் தவறாக கூறவில்லையென்று எண்ணுகிறேன். கத்தோலிக்கரோ அல்லது லூத்தரனோ, லூத்தரன். அவர் சொன்னார். அவர் பெந்தெகொஸ்தே கூட்டம் நடக்கும் கூடாரத்துக்குள் நுழைந்து சென்றார், அவர் எழுந்து நின்றார்... இறுதியில் அவர் பீடத்தண்டை சென்றார். அவர் அப்படி செய்தபோது, கர்த்தர் அவர் மீது இறங்கி அவரை மிக அதிகமாக ஆசீர்வதித்து... அவரால் ஏழு வெவ்வேறு பாஷைகள் பேச இயலும் என்று நினைக்கிறேன். அவர் சொன்னார், அவர் ஒரு பாஷையை பேச முயற்சி செய்தார், ''அது கிரியை செய்யவில்லை“, பிறகு வேறொன்றை பேச முயற்சி செய்தார், அதுவும் கிரியை செய்யவில்லை. அவரால் உங்களைப் போல் ஸ்பானிஷ் மொழியை நன்றாக பேச முடியுமென்று நினைக்கிறேன். அவர் எல்லா பாஷைகளையும் முயற்சிசெய்து பார்த்தார், அவை யாவும் கிரியை செய்யவில்லை. பிறகு பாருங்கள், என்ன தெரியுமா, தேவன் மிகவும் நல்லவராய் கீழே இறங்கி வந்து, அவர் முன்பு பேச முயற்சி செய்யாத ஒரு பாஷையை கொடுத்தார். ”இது கிரியை செய்கிறது'' என்று அவர் சொன்னார். அதுசரி. மறுகரையில் அப்படித்தான் இருக்குமென்று நினைக்கிறேன். 4ஒரு சிறு சபையைக் குறித்து என் உள்ளத்தில் பல நினைவுகள் உள்ளன். நான் நினைக்கிறேன் அது... ஓ, அது எங்கிருக்கிறது என்பதை மறந்து விட்டேன். அது எங்கோ டோன்டோ தெருவின் அருகில் உள்ளது. “டோன்டோ தெரு” என்னும் பெயர் எனக்கு ஞாபகமுள்ளது. அத்தெருவில் தான் ஸ்பானிஷ் அப்போஸ்தல சபை இருந்தது. உங்கள் சபை போதகரிடம் நான், ''எழுப்புதல் கூட்டம் நடத்த இது மிகவும் அருமையான இடம்'' என்றேன். இங்கு நிறைய இடம், புது சபை, அருமையான மக்கள். ஆகவே என்றாவது ஒரு நாள் இங்கு எழுப்புதல் கூட்டம் நடத்துவதற்கு இது ஏற்றதாயிருக்கும். நாங்கள் இங்கு வந்து ஒரு எழுப்புதல் கூட்டம் நடத்துவதற்காக நீங்கள் ஜெபியுங்கள். மற்ற சபையில் நமக்கிருந்த எழுப்புதல் போலவே இதுவும் இருக்கும் என்று நம்புகிறேன். அந்த எழுப்புதல் கூட்டத்தின் போது நான் முற்றத்தில் நின்று கொண்டு, வேலியின் மேல் சாய்ந்து கொண்டு, தெருவில் இங்குமங்கும் நடந்து, இரவு நேரத்தில் யாரும் காணாமல் இங்கிருந்து புறப்பட்டுச் செல்ல முயன்றதை நான் நினைவு கூருகிறேன். அது நிச்சயமாக நான் மறக்க முடியாது. மெய்சிலிர்க்கும் அனுபவமாயிருந்தது. அங்கே அந்த சிறுமிகளும் சகோதரரும் சேர்ந்து பாடின பாடல்களின் ஒலிப்பதிவு என்னிடம் உள்ளது. அவர்கள் ''ஒன்லி பிலீவ்“ (Only Believe) என்று பாட முயன்ற போது, அதை சரிவர உச்சரிக்க முடியவில்லை. ஆகவே ''ஒன்லி பிலீவ்” என்று பாடுவதற்கு பதிலாக அவர்கள் “இயோனே பிலிவ்” (Yeonea believe) என்று பாடியிருக்கிறார்கள், பாருங்கள். 5இருப்பினும் என் பெண்கள் ரெபேக்காள், சாராள் இருவரும், ''அப்பா, அந்த சிறுமிகள் பாடின ஒலிநாடாவைப் போடுங்கள்'' என்று கேட்பது என் நினைவுக்கு வருகிறது. அவர்கள் 'ஸ்பானிஷ் சிறுமிகள்' என்று கூறுவதற்கு பதிலாக, ஸ்பினாச் சிறுமிகள் பாடின “ஒன்லி பிலீவ் பாடலை போடுங்கள்'' என்பார்கள். அவர்களால் 'ஸ்பானிஷ்' என்னும் சொல்லை சரியாக உச்சரிக்க முடியவில்லை. அவர்கள் கூட்டத்தை பின் தொடர்ந்தார்கள். அப்பொழுது எழுப்புதல் நடந்து கொண்டிருந்தது. அவர்கள் கூட்டத்தை பின் தொடர்ந்து, மேற்கு கரை வரைக்கும் வந்தார்கள். நாங்கள் கலிபோர்னியாவுக்கு புறப்பட்டபோது ஒரு சிறு காரியம் என் இருதயத்தில் ஆழமாக பதிந்தது. சகோ. மூரும், நானும், சகோ. ப்ரெளனும் தலைநகரான மெக்ஸிகோவில் இருந்தோம். அன்றிரவு அந்த கட்டித்தில் நான் வியாதியஸ்தர்களுக்காக ஜெபித்தபோது, அந்த சிறுவர்கள் அங்கு நின்று கொண்டு அவர், “உனக்காக கவலை கொள்கிறார்” என்னும் பாடலைப் பாடினார்கள். அந்த பாடலை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். ''சூரிய வெளிச்சமானாலும் நிழல்களானாலும், அவர் உனக்காக கவலை கொள்கிறார்''. பல சமயம் வெளிநாடுகளில் உலகத்தின் கடுமையான போராட்டங்களினூடே கிறிஸ்துவின் செய்தியை நான் பிரசங்கிக்கும் போது, அந்த சிறுவரும் சிறுமியரும் பாடின “அவர் உனக்காக கவலை கொள்கிறார், சூரிய வெளிச்சமானாலும் நிழல்களானாலும், அவர் எப்பொழுதும் உனக்காக கவலை கொள்கிறார்'' என்னும் பாடல் என் நினைவுக்கு வரும். ஆகவே அது எனக்கு அதிக உற்சாகமாவும் உதவியாகவும் இருந்து வருகிறது. 6உங்கள் அருமையான போதகரைச் சந்தித்து, சபை உயிருள்ளதாயிருக்கக் காண்பதைக் குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன். உங்களுக்கு இந்த பெரிய அழகான கட்டிடம் உள்ளது. எல்லோரும் உட்காரும் அளவுக்கு விசாலமானது. கார்களை நிறுத்த இடம். பரிசுத்த ஆவியின் கரங்களில் இது நல்ல இடமாக அமைந்துள்ளது. நாம் பெரிய எழுப்புதல் கூட்டம் நடத்த விரும்புகிறோம் என்று அவருக்கு அறிவிப்போமானால், அவர் அதை நமக்களிப்பார் என்று நான் நம்புகிறேன். 7இன்றிரவு நாங்கள் இயேசுவின் நாமம் சபை என்றழைக்கப்படும் சகோ. அவுட்லாவின் சபைக்கு போகிறோம். அது மற்ற பக்கத்தில் உள்ளது. சகோ. அவுட்லாவின் சபை... அப்போஸ்தல சபை என்று தான் நினைக்கிறேன். அவர் தம்முடைய சபையை 'இயேசுவின் நாமம் சபை' என்று அழைத்தாலும், அவர் அப்போஸ்தல விசுவாசம் கொண்டவராயிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆகவே இன்றிரவு நாங்கள் அங்கிருப்போம். நாங்கள் இந்த ஸ்பானிஷ் சபையை நோக்கி “அங்கு வாருங்கள்'' என்று சொல்லப் போவதில்லை. உங்கள் பணியில் நீங்கள் நிலைத்திருங்கள். பிறகு வியாழக்கிழமை முதல், மற்ற சபைகளிலுள்ள ஆராதனைகள் முடிந்தவுடன், கிறிஸ்தவ வர்த்தகரின் ஒரு பெரிய கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த கன்வென்ஷன் கூட்டங்களில் தலைசிறந்த பேச்சாளர்கள் பங்கு கொள்வார்கள். ஆகவே ஓரல் ராபர்ட்ஸ், சமீபத்தில் இரட்சிக்கப்பட்ட ஏதோ ஒரு மெதோடிஸ்டு சகோதரன் மிகவும் வல்லமையான பிரசங்கம் செய்கிறார் என்று கூறுகின்றனர். இந்த கன்வென்ஷன் கூட்டங்கள் உங்களுக்கு அதிக மகிழ்ச்சி அளிக்குமென்று நிச்சயமுடையவனாயிருக்கிறேன். சகோதரன் அறிவித்தது போல, வாலிபர்களுக்கான கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக என்னுடைய பிள்ளைகளை நான் கொண்டு வருகிறேன். எனவே அங்கு வாருங்கள். நீங்கள் வருவது எங்களுக்கு மகிழ்ச்சியாய் இருக்கும். கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. 8இப்பொழுது நான் வேதாகமத்திலிருந்து அவருடைய ஆசீர்வாதமான வார்த்தை சிலவற்றை படிக்க விரும்புகிறேன். இக்காலை வேளையில் சிறிது நேரம் பேசுவதற்காக இதை நான் தெரிந்துகொண்டேன். உங்களை நான் நீண்ட நேரம் பிடித்து வைக்கப் போவதில்லை. ஒரு சில வசனங்கள். அவைகளில் ஒன்று, 1 சாமுவேல் புத்தகத்தில் உள்ளது. மற்றது ஏசாயாவில் உள்ளது. நான் முதலில் ஏசாயாவிலுள்ள பாகத்தை படிக்கப் போகிறேன். மேலும் நான்... சுற்றிலும் உள்ள 'எல்லோருக்கும் நன்றாக கேட்கிறதா? இந்த இரு ஒலிபெருக்கிகளும் அதிகமாக ஒலிபெருக்குவது போல் எனக்குக் காணப்படுகிறது. ஏனென்று தெரியவில்லை' அங்குள்ள உங்கள் எல்லோருக்கும் தெளிவாக கேட்கிறதா, உங்கள் கரங்களை உயர்த்துங்கள். நல்லது, நல்லது. 9இப்பொழுது என் தொண்டை சிறிது கரகரப்பாய் உள்ளது. அது அதிகம் பேசுவதால் விளைந்த ஒன்று, பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஸ்பானிஷ் சகோதரர்களின் மத்தியில் நான் வந்திருந்த அன்று முதற்கொண்டு - அது பதினாறு அல்லது பதினேழு ஆண்டுகள் இருக்குமென்று நினைக்கிறேன் - நான் பிரசங்கித்துக் கொண்டேயிருக்கிறேன். எனக்கு களைப்பாயுள்ளது என்று அன்றே நான் அவர்களிடம் கூறினேன். இப்பொழுதும் எனக்கு களைப்பாயுள்ளது. இருப்பினும் தேவனுடைய கிருபையினால் நான் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறேன். இப்பொழுது நாம் ஏசாயா: 40ம் அதிகாரத்துக்கு வேதாகமத்தை திருப்புவோம்; பிறகு 1 சாமுவேல் முதலாம் அதிகாரம் இல்லை, 3ம் அதிகாரம். வார்த்தையை வாசிப்பதற்கென வேதத்தில் இவ்விடங்களை எடுத்துள்ள இவ்வேளையில் நாம் தலைகளைத் தாழ்த்தி தேவனை நோக்கி மன்றாடுவோமாக. 10எங்கள் பரலோகப் பிதாவே, தேவனுக்கென்றும் அவருடைய ஊழியத்துக்கென்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இந்த அழகான பிரகாரத்தில் நின்று கொண்டிருக்கும் இந்த சிலாக்கியத்திற்காக உமக்கு இன்று நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இந்த மேடையில் அல்லது பிரசங்கபீடத்தில் உம்முடைய ஊழியக்காரர்கள் பலமுறை உம்முடைய ஊழியத்தை பிரதிஷ்டையுடன் செய்து வந்திருக்கிறார்கள். இந்தக் காலை வேளையில் கடந்த கால சம்பவம் எங்கள் நினைவுக்கு வருகின்றது. அப்பொழுதுதான் எழுப்புதல் துவங்கின காலம் அது. பரிசுத்த ஆவியானவர் ஒரு பெரிய ஒளியின் ரூபத்தில் அக்கினி ஸ்தம்பத்தை போன்று ஒரு பெரிய ஒளியாக, கீழே இறங்கி வந்து, செய்தியானது உலகம் பூராவும் விரைவில் பரவும் என்று கூறினார். அது நிறைவேறி இப்பொழுது அது சரித்திரமாகிவிட்டது. பெரிய மனிதர்களான ஓரல் ராபர்ட்ஸ், டாமி ஆஸ்பார்ன், டாமி ஹிக்ஸ் ஆகியோர் அதைக் கண்ட பின்பு, அவர்கள் மூலம் செய்தி பற்றி எரிந்தது. நாங்கள் ஒருமித்து செய்த உழைப்பின் பலனாக, இந்தச் செய்தி - பெந்தெகொஸ்தே செய்தி -வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு நாட்டிலும் எழுப்புதல் அக்கினியை கொழுந்துவிட்டுஎரியச் செய்து கொண்டிருக்கிறது. இதற்காக, ஓ வல்லமையுள்ள தேவனே, நாங்கள் நன்றியும் துதியும் உமக்கு செலுத்துகிறோம். 11இன்று எங்கள் இருதயத்தைப் பக்குவப்படுத்தி, விரைவில் வருமென்று நாங்கள் விசுவாசித்துக் கொண்டிருக்கிற அந்த மகத்தான எடுத்துக்கொள்ளப்படுதலுக்கென்று எங்களை ஆயத்தப்படுத்தியருளும். அதற்கு, அல்லது நீர் எங்களுக்காக வைத்துள்ள வேறெதற்காவது, எங்கள் இருதயங்கள் பக்குவப்படாமலிருக்குமானால், எங்கள் குறைகளை நீர் மன்னித்து, இன்று உம்முடைய வார்த்தையின் மூலம் எங்களுடன் பேச வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். இந்தச் சபையின் போதகரையும், இதன் டீகன்மார்களையும், தர்மகர்த்தாக்களையும், சபையின் அங்கத்தினர் அனைவரையும் ஆசீர்வதியும். இந்த சிறு பாடகர் குழுவினரையும், பியானோ வாசிப்பவரையும், இசைக்கருவிகள் இசைப்பவர்களையும் ஆசீர்வதிப்பீராக. இந்த இடத்தின் வாசலுக்குள் பிரவேசிக்கும் அனைவரையும் நீர் ஒட்டு மொத்தமாக ஆசீர்வதிப்பீராக. அவர்கள் உட்பிரவேசித்தபோது இருந்ததைக் காட்டிலும், வெளியே செல்லும்போது உம்மிடம் சிறிது அதிகமாக கிட்டி சேர்ந்திருக்க அருள் புரிவீராக. பிதாவே, இதை அருளும். இக்காலை வேளையிலும் அது அப்படியே இருப்பதாக. இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 12இப்பொழுது நாம் ஏசாயா: 40ம் அதிகாரத்துக்கு திருப்பி அதை வாசிப்போம். என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள் எருசலேமுடன் பட்சமாய் பேசி அதின் போர் முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும், அதற்குக் கூறுங்கள் என்று உங்கள் தேவன் சொல்லுகிறார். கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தர வெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வை பண்ணுங்கள் என்றும், பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும், கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று. ஏசா. 40: 1-5 இப்பொழுது சாமுவேலின் புத்தகம், 1 சாமுவேல் 3ம் அதிகாரம், 1, 2 மற்றும் 19ம் வசனங்களைப் படிக்க விரும்புகிறேன். சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் ஏலிக்கு முன்பாக கர்த்தருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தான்; அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை: ஒரு நாள் ஏலி தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக் கொண்டிருந்தான்; அவன் பார்க்கக் கூடாதபடிக்கு அவனுடைய கண்கள் இருளடைந்திருந்தது. தேவனுடைய பெட்டி இருக்கிற கர்த்தருடைய ஆலயத்தில் தேவனுடைய விளக்கு அணைந்து போகுமுன்னே சாமுவேலும் படுத்துக் கொண்டிருந்தான். அப்பொழுது கர்த்தர் சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி சாமு 3:1-4 19ம் வசனம் சாமுவேல் வளர்ந்தான்; கர்த்தர் அவனுடனே கூட இருந்தார்; அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்துபோக விடவில்லை. சாமு 3:19 13ஓ, நாம் ஒரு மாத காலம் பேசுவதற்கு இந்த வேதவாக்கியங்கள் போதுமானவை. இந்த மகிமையான வேதவாக்கியங்களிலிருந்து நாம் நிறைய சந்தர்ப்பங்களைப் பேசலாம். ஆனால் இன்று காலை வேளையில் நாம் குறித்த நேரத்தில் வெளியேறுவதற்கு நமக்கு ஏறக்குறைய இருபது நிமிடங்கள் மட்டுமே உள்ளன... ஞாயிறு பள்ளி முடிந்திருக்குமென்று நினைக்கிறேன். அல்லது இதற்கு பிறகு ஒருவேளை நடக்கலாம். எனக்குத் தெரியாது. எப்படியிருப்பினும், ''இந்தக் கடைசி நாட்களில் தேவனுடைய சத்தம்“ என்னும் தலைப்பை உபயோகிக்க விரும்புகிறேன். அது தலைசிறந்த நேரமாக இருந்தது. நாம் எந்த வேத பாகத்திலிருந்து இப்பொழுது பேசிக் கொண்டிருக்கிறோமோ, அதில், ''சாமுவேலின் நாட்களில் பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை'' என்று கூறப்பட்டுள்ளதைக் காண்கிறோம். ஆகவே, “தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப் போவார்கள்'' என்று வேதம் உரைக்கிறது. நமக்கு தரிசனம் வேண்டும். தரிசனங்கள் தீர்க்கதரிசிகளுக்கு வருகின்றது. அது அவர்களிடம் உரைக்கப்படும் கர்த்தருடைய வார்த்தை. 14ஏலி ஒரு தீர்க்கதரிசியல்ல, அவன் ஒரு ஆசாரியன் என்று நாம் காண்கிறோம். அவனுக்கு வயது முதிர்ந்து, அவனுடைய கண்கள் இருளடைந்திருந்தது. அவனுக்கு சுற்றிலும் செல்ல பார்வை இல்லாதிருந்தது. அவன் பெரிய தேக அமைப்பு கொண்டவன். தேவனுடைய பணியை அவன் செய்து முடிக்காமல் அப்படியே விட்டுவிட்டான். இன்றைக்கு உள்ள நிலையைப் போலவே அது இருந்தது. சபை, அந்த அமைப்பு மற்றும் ஸ்தாபனங்கள் சுவிசேஷ பணியில் நீண்ட நாள் ஈடுபட்டு, இப்பொழுது அவர்கள் தளர்ந்த நிலையை அடைந்துள்ளனர் என்று நான் நினைக்கிறேன். தேவனுடைய பணி - சத்திய வார்த்தை - செய்து முடிக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. ஏனெனில் ஸ்தாபன சபையின் பார்வை இருளடைந்துள்ளது. தேவனுடைய சத்தம் நம் மத்தியில் பேசி, நம்மை முன்னிருந்த நிலைக்குக் கொண்டு செல்வதே இன்றைய நமது தேவையாயுள்ளது. பாருங்கள், ஏலி படுத்துக் கொண்டிருந்தான்... அவன் பார்வை மங்கிக் கொண்டிருந்தது. அவன் ஒரு ஆசாரியன். அவர்களுக்கு அப்பொழுது பிரத்தியட்சமான தரிசனம் இருக்கவில்லை, அந்த மிகப்பெரிய தேவை! 15தேவன் அந்நேரத்தின் தேவையை சந்திப்பதாக வாக்களித்தார். அவர் எப்பொழுதும் அதை செய்கிறார். இந்த நேரத்திற்கான தேவையை சந்திக்கவும், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நேரத்தைச் சந்திக்கவும் நமக்கு இன்று தேவனுடைய சத்தம் தேவையாயுள்ளது. அவர் அதை வாக்களித்த பிறகு, அவர் அந்த வாக்குத்தத்தத்தைக் காப்பாற்றுவார் என்று நாம் உறுதிகொள்ளலாம். அவர் தேவையை சந்திப்பார் என்று வாக்களித்ததின் பேரிலுள்ள அப்படிப்பட்ட நம்பிக்கையை ஒரு விசுவாசி தன் சிருஷ்டி கர்த்தரின் மேல் வைத்திருக்கிறான். இன்றைக்கு நமது சபை இந்நிலையிலுள்ள காரணம் என்னவெனில், சபை தேவனுடைய சத்தத்தைக் கேட்கக் கூடாத படிக்கு அதை திசை திருப்ப பல்வேறு சத்தங்கள் இருப்பதே. அதன் விளைவாக தேவனுடைய சத்தம் அவர்கள் மத்தியில் பேசின போதிலும் அவர்கள் அதை கேட்பார்களா என்பது மிகவும் சந்தேகமே. அவர்களால் ஒருவேளை அதை புரிந்து கொள்ளவும் இயலாது, ஏனெனில் அது அவர்களுக்கு ஒரு அந்நிய காரியமாக இருக்கும். அவர்கள் இந்நாளில் காணப்படும் பல்வேறு சத்தங்களுக்கு தங்களை மையப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 16நாம் வாசித்த வேத பாகத்தை கவனிப்போமானால், தேவனுடைய சத்தம் அவர்களுக்கு அந்நிய காரியமாக இருந்தது. இன்றைக்கும் கூட தேவனுடைய சத்தம் அப்படித்தான் இருக்கிறது. பல்வேறு சத்தங்கள் இன்றுள்ளன. தேவன் தமது சத்தத்தை அளிப்பதாக வாக்கு கொடுத்திருந்தால், மற்ற சத்தங்கள் தேவனுடைய சத்தத்துக்கு முரண்பாடாக அமைந்திருந்தால், தேவனுடைய சத்தம் பேசப்படும்போது அதை நாம் புரிந்து கொள்ளாதபடிக்கு நம்மை குழப்பத்தில் ஆழ்த்த அது நம்முடைய சத்துருவின் சத்தமாயுள்ளது. நாம் கவனிப்போமானால், ஏலிக்கும் சாமுவேலுக்கும், நிகழ்ந்தது இது போன்றதே, ஆனால் ஏலி அது தேவன் என்று உடனே கண்டுகொண்டான். அது ஏலியின் அவபக்தியான செயல்களைக் குறித்தது. தேவனுடைய சத்தம் சாமுவேலிடம் பேசினபோது, அது ஏலியின் தவறுகளை எடுத்துரைத்தது. அவன் தன் குமாரரை அடக்காமல், அவர்கள் காணிக்கையின் பணத்தையும், பலியின் இறைச்சியையும் அபகரிக்கின்றனர் என்று அவர் சாமுவேலிடம் கூறினார். அவர்கள் அப்படி செய்தது தவறாகும். அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு முரணாக தவறான செயல்களைப் புரிந்து வந்தனர். 17மேலும் சாமுவேல்... சாமுவேல் செய்யக்கூடிய ஒன்றே ஒன்று, அதை மறைக்காமல் அப்படியே அறிவிப்பதே, அதை ஏலியிடம் அறிவிக்க சாமுவேல் பயந்தான். ஏனெனில், அது அவனை ஆலயத்தில் வளர்த்து வந்த ஏலிக்கு விரோதமாக அமைந்திருந்தது. ஏலி, “மறைக்காமல் சொல்” என்றான். அப்பொழுது சாமுவேல் ஒன்றையும் மறைக்காமல், என்ன நடக்கப் போகிறதென்று கூறி, “ஏலி ஆசாரியனாயிருந்த நாட்கள் முடிவடைந்து விட்டது'' என்று கூறினான். ஏனெனில் தேவன் அதை உரைத்தார். தேவன் தமது செய்தியை தீர்க்த்தரிசியாகிய சாமுவேலின் மூலம் அனுப்பினார். சாமுவேலுக்கு மிக அபூர்வமான பிறப்பு, குழந்தை பருவம் முதற்கொண்டே தேவனுக்கென்று பிரதிஷ்டை செய்யப்பட்டவன். அவனுடைய பிள்ளை பருவத்திலேயே தேவன் அவனிடம் பேசி, அவனுக்கு முன் வைக்கப்பட்டிருந்த ஊழியத்துக்கு அவனை ஆயத்தப்படுத்தினார். ஏலியின் காலம் முடிவடைந்து கொண்டிருந்தது. 18இன்று பூமியில் அநேக சத்தங்கள் உள்ளன. அவை முற்றிலும் கடினமானவை. ஏனெனில் அவை இயற்கைக்கு மேம்பட்டதின் சத்தத்தை அமிழ்த்தி விடுகின்றன. பல நுண்ணறிவுள்ள சத்தங்கள், நுண்ணறிவு மிக்க மகத்தானவர்களின் பெரிய சத்தங்கள். அவர்கள் தங்கள் நுண்ணறிவு நிலையில் நாடுகளையே அசைத்துள்ளனர். அவர்கள் ஒரே இரவில் தோன்றியவர் அல்ல. அவர்கள் பெரிய ஸ்தாபனங்களை ஒன்றாக கூட்டி, பெரிய கூட்டங்கள் நடத்தி, தங்கள் சிறப்பான பேச்சுகளின் மூலம் நாடுகளையே குலுக்கினவர்கள். இதைக் காணும் ஒருவர் சிறிது குழப்பமுறலாம். இவை எவ்வாறு தொடர்ந்து நடந்து செழிப்படைகின்றன என்பது அவர்களைப் போதிய அளவுக்கு குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சத்தங்கள் எழுந்து இவைகளைச் செய்யும் போது, அவை உண்மையான தேவனுடைய சத்தத்தை பின்னால் எங்கோ தள்ளி விடுகின்றன. 19“தேவனுடைய சத்தம்''. ''அது தேவனுடைய சத்தம் என்று நாங்கள் எப்படி அறிவது'' என்று கேட்கின்றனர். ஏனெனில் இன்றைக்காக... அப்பொழுது அது உறுதிப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசிக்குள் இருந்தது. அது தேவனுடைய சத்தம் என்று இன்றைக்கு எப்படி அறிந்து கொள்வது என்றால், அது தீர்க்கதரிசியின் வார்த்தையின் வெளிப்படுதலாய் அமைந்திருக்கும். இது தான் தேவனுடைய தீர்க்கதரிசி ஆகும். உண்மையான தேவனுடைய சத்தம் உண்மையான, ஜீவிக்கிற, இயற்கைக்கு மேம்பட்ட தேவனையும், அவருடைய இயற்கைக்கு மேம்பட்ட வார்த்தையையும் திரும்பக் கொண்டு வந்து, உண்மையான வார்த்தையை இயற்கைக்கு மேம்பட்ட வெளிப்படுத்துதலாக இருக்கும். அதன் மூலம் அது தேவனுடைய சத்தம் என்று நாம் அறிந்து கொள்கிறோம். ஏனெனில் அந்த இயற்கைக்கு... மற்ற ஆதிக்கங்களில் வேறு அநேக சத்தங்கள் இருந்து கொண்டு, உண்மையான தேவனுடைய சத்தத்தை அமிழ்த்திவிடுகின்றன. ஆனால் நினைவில் கொள்ளுங்கள், அது பிரகாசிக்கும், அது புறப்பட்டு வரும். அது நிச்சயம் செய்யும். 20இன்று அரசியல் உலகில் சத்தம் உள்ளது. அது ஒரு பெரிய சத்தம். அரசியலின் இந்த பெரிதான நாட்களில் ஜனங்கள் முற்றிலுமாக... அது அவர்கள் சபைகளிலும் மற்றவிடங்களிலும் கலந்துள்ளது. பல சமயங்களில், நாம் சமீபத்தில் கண்டது போல், சபைகளில் அரசியலின் சத்தம் தேவனுடைய சத்தத்தை விட மிகவும் வலிமையாயுள்ளது. இல்லையெனில் அமெரிக்கர் இப்பொழுது செய்துள்ளதை ஒருக்காலும் செய்திருக்க மாட்டார்கள். பாருங்கள்? அவர்கள் ஒருக்காலும் செய்திருக்க மாட்டார்கள். தேவனுடைய சத்தம் சபைகளிலே உயிருள்ளதாக வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் இந்த தவறுகளை ஒரு போதும் செய்திருக்கமாட்டார்கள். அரசியலின் சத்தம் தேவனுடைய சத்தத்தை விட இன்று இவ்வுலகில் வலிமையாக இருக்கும் காரணத்தால் மக்கள் தங்கள் கிறிஸ்தவ பிறப்புரிமையை ஒரு பானை புகழுக்காகவும், கல்விக்காகவும், அரசியல் அதிகாரத்துக்காவும் விற்றுப்போட்டனர். அதைக் காண மிகவும் வெட்கமாய் உள்ளது. நமது தேசம் எதனால் உருவாக்கப்பட்டுள்ளதோ, நாம் எக்காரணத்தைக் கொண்டு மற்ற தேசத்தைவிட்டு வெளிவந்து இங்கு வந்து குடியேறி - பிளைமெளத் பாறை மேஃப்ளவர் போன்றவை - இந்த சிறந்த பொருளாதாரத்தை நிலை நிறுத்தினோமோ, அதற்கே ஜனங்கள் இப்பொழுது திரும்பி தங்கள் வாக்குகளை (vote) அளித்துவிட்டனர். நாம் வெளிவர கடினமாக போராடின அதன் பிடியிலே மறுபடியும் சிக்கிக் கொண்டோம். ஏனெனில் அப்படித்தான் நடக்கும் என்று வேதாகமம் கூறியுள்ளது. 21ஏலியின் முறைமை, தீர்க்கதரிசிக்குப் பதிலாக ஆசாரியன். தீர்க்கதரிசிதான் வார்த்தை, ஆசாரியன் தான் சபை. அது மிகவும் தளர்ந்த ஒரு நிலையை அடைந்து, வார்த்தையானது ஜனங்களுக்கு அந்நிய காரியமாக ஆகிவிட்டது. அவர்கள் அதை கிரகித்துக் கொள்ளவில்லை. நீங்கள் பேசினாலும் அவர்களால் அதை விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவர்கள் அதற்காக பயிற்றுவிக்கப்படவில்லை. பவுல், “எக்காளம் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணுவான்?'' என்கிறான். மக்கள் ஒரு சபையின் சத்தத்தை - சபையின் எக்காளத்தை - கேட்க பயிற்று விக்கப்பட்டுள்ளனர். “மற்றவர்களுக்கு உள்ளதைக் காட்டிலும் எங்கள் ஞாயிறு பள்ளிகளில் அதிகம் பேர் உள்ளனர்.'' அதனால் ஒரு காரியமும் இல்லை. ''மற்ற ஸ்தாபனங்களில் உள்ளதை விட எங்கள் ஸ்தாபனத்தில் அதிகம் பேர் உள்ளனர். ஸ்தாபனங்கள் அனைத்திலும் எங்களுடையதே மிகப்பெரிய ஸ்தாபனம்”. பாருங்கள், அம்மாதிரியான சத்தத்துக்கே மக்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீதிகளில் சென்று மக்களை கொண்டு வருகின்றனர். ஒரு பெரிய சுவிசேஷக் கூட்டம் நடத்தி பல்லாயிரக்கணக்கான பேர்களை உள்ளே கொண்டு வருகின்றனர். அவர்கள் எதில் சிரத்தை கொண்டுள்ளனர்? ''நாங்கள் மிகப் பெரிய சபையைக் கொண்டுள்ளோம். எங்கள் சபையோர் மற்றெல்லாரை விட மிக அதிகமானவர்கள். இருப்பதிலே எங்கள் ஞாயிறு பள்ளிதான் மிக அதிக அங்கத்தினர்களைக் கொண்டுள்ளது. நகராண்மைத் தலைவர் கூட நமது சபைக்குத்தான் வருகிறார்'' போன்றவைகளில் அவையெல்லாம் நல்லதுதான். ஆனால் அந்த சபை தேவனுடைய சத்தத்தை - சுவிசேஷ எக்காளத்தை - கேட்க பயிற்றுவிக்கப்படாமல் இருந்தால், இவற்றால் என்ன நன்மை விளையப் போகின்றது? 22நமது அரசாங்கத்தில் எழுந்தது போன்ற ஒன்று சபையில் எழுந்தபோது என்ன நடந்தது? சபையானது எக்காள சத்தத்தை விளங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. செழிப்புக்கான பெரிய வாக்குறுதி, நுண்ணறிவு படைத்த ஒரு சிறந்த அறிவாளி வருகிறார், அவர்கள் வேதம் முன்னுரைத்துள்ளதற்கு சென்று அதை உள்ளே கொண்டு வந்துவிட்டனர். பாருங்கள், அரசியல் சத்தம்! அது மத சம்மந்தமான சத்தத்தை - சுவிசேஷசத்தத்தை - மிஞ்சிவிட்டது என்பதை நிரூபிக்கிறது. இல்லையென்றால் அவர்கள் செய்ததை செய்திருக்க மாட்டார்கள். நமக்கு அநேக காரியங்கள் வாக்களிக்கப்படுகின்றன, நமக்கு செழிப்பு வாக்களிக்கப்படுகின்றனது. அதைப் பெறுவோம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு விசுவாசிக்கு இவை ஒன்றுமில்லை. நீங்கள் எபிரெயர் 11ம் அதிகாரத்திற்கு உங்கள் வேதாகமத்தை திருப்பி, பரி. பவுல் கூறுவதைக் கேளுங்கள் - எப்படி அவர்கள் அந்த நாட்களில் ''செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்திக் கொண்டு திரிந்து, குறைவையும் துன்பத்தையும் அனுபவித்தார்கள். அவர்களுக்கு போக்கிடம் இல்லை, ஒரு நகரத்துக்குள் பிரவேசிக்க முடியவில்லை'' என்று. 23நான் நிசாயா ஆலோசனை சங்கத்தைக்குறித்து படித்துக் கொண்டிருந்தேன். கிறிஸ்துவின் மரணத்திற்குப் பிறகு முன்னூறு ஆண்டுகள் கழித்து, ரோமாபுரியிலிருந்து நிசாயாவில் பெரிய பிரச்சினைகள் எழுந்தன. அப்பொழுது உண்மைக்காக நின்ற அந்த மகத்தான சபை, தங்களுக்கு வேதாகமம் மாத்திரமே வேண்டும் என்று கூறினது. ஆனால் முதலாம் ரோம சபையிலிருந்த மதம் மாறின ரோமர்கள் கோட்பாடுகளை உள்ளே புகுத்தினர். உதாரணமாக, நாம் கிறிஸ்துமஸ் கொண்டாடுதல் போல. கிறிஸ்துமஸ் - கிறிஸ்து டிசம்பர் 25ம் தேதி பிறக்கவேயில்லை. ஏன்? யூதேயாவின் மலைகள் அப்பொழுது பனியால் மூடப்பட்டிருக்கும். மேலும் அவர்... அது வேதாகமத்தில் சொல்லப்பட்ட பல தீர்க்கதரிசனங்களுக்கு மாறுபட்டதாக இருக்கிறது. அவர் மற்ற ஆட்டுக்குட்டிகளைப் போல வசந்த காலத்தில் பிறந்தார். அவர் ஏன் ஒரு வீட்டில் பிறக்காமல் தொழுவத்தில் பிறந்தார்? ஏனெனில் அவர் ஒரு ஆட்டுக்குட்டி. அவர் ஏன் சிலுவையில் அறையப்பட்ட அந்த பலிபீடத்திற்கு தாமாக செல்லவில்லை? அவர் சிலுவைக்கு அடிக்கப்படும் ஆட்டுக்குட்டியாக கொண்டு போகப்பட்டார். நீங்கள் ஆட்டுக் குட்டியை கொல்வதற்காக கொண்டு போகின்றீர்கள். அவர் ஒரு ஆட்டுக்குட்டி. அப்படியானால் அவர் ஆட்டுக் குட்டிகள் பிறக்கும் சமயத்தில் தான் பிறந்திருக்க வேண்டும். 24ஆனால் பாருங்கள். அந்த பண்டிகையைக் கொண்டாட அவர்கள் சூரிய தேவனின் பிறந்த நாளைக் குறித்தார்கள். அதாவது சூரியன் டிசம்பர் 20 முதல் 25ம் தேதி வரைக்கும் நகருவதில்லை. அது ஒவ்வொரு நாளும் சிறிது மாறி, நீண்டு கொண்டு வந்து, ஜூலை மாதத்தில் மிகவும் நீண்ட பகலை அடைகின்றது. டிசம்பரில் அது மிகக் குறுகிய நாளை அடைகின்றது. ஆகவே அந்த இருபத்தைந்தாம் நாளின் குறுகிய நாளில், இருபதாம் தேதியிலிருந்து இருபத்தைந்தாம் தேதி காலத்தில் அவர்கள் ரோம் குதிரையேற்றக் களியாட்டுகளில் ஈடுபட்டு சூரிய தேவனின் பிறந்த நாளைக் கொண்டாடினார்கள். அவர்கள் ரோம தேவனான ஜூபிடரை கிறிஸ்தவ மார்க்கத்துக்குள் நுழைத்தார்கள். அவர்கள், ''நாம் தேவ குமாரனுடைய (Son of God) பிறந்த நாளையும் ஒன்று சேர்த்து, அதை மிகச் சிறப்பான ஒரே கொண்டாட்டமாக செய்து விடுவோம்'' என்றனர். இது மாறுபாடானது! ஓ, அவர்கள் அநேக கோட்பாடுகளை உள்ளே நுழைத்துவிட்டனர். 25அப்பொழுது பரிசுத்தவான்களாகிய பாலிகார்ப், ஐரினேயஸ், மார்டின் போன்ற உண்மையான தேவனுடைய மனிதர் சத்தியத்தில் நிலைத்திருக்க விரும்பினர். நிசாயா ஆலோசனை சங்க கூட்டத்தின்போது, இந்த ஜனங்களில் சிலர் நிராகரிக்கப்பட்டு, முடிவில் தீர்க்கதரிசிகள் செம்மறியாட்டுத் தோலை போர்த்தவர்களாய், வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு இந்த ஆலோசனை சங்கக் கூட்டத்தில் பங்கு கொண்டனர். இவர்கள் தேவனுடைய வார்த்தையை அறிந்திருந்தனர். ஆனால் பதினைந்து நாட்கள் இரத்தம் சிந்திய அரசியலுக்குப் பின்பு, மக்கள் ஆதரவினால் இது சத்தியத்தை மீறி நிர்ணயிக்கப்பட்டது. அதன் பிறகு ஆயிரம் ஆண்டுகளுக்கு இருண்ட காலம், பாருங்கள். 26ஆனால் எக்காளம் மறுபடியும் தொனிக்குமென்று தேவன் வாக்களித்தார். மக்கள் எப்பொழுதுமே வார்த்தையின் உண்மையான சத்தத்துக்கு செவிகொடுப்பார்கள். நீங்கள் செய்வதை எப்பொழுதுமே வார்த்தையின் மூலம் சோதித்து அறிந்து கொள்ளவேண்டும். அரசியலின் சத்தம்! அமெரிக்காவிலுள்ள நாமும் உலகத்தின் மற்ற பாகங்களில் உள்ளவர்களும், இன்று ஒரு உரத்த சத்தத்தைப் பெற்றிருக்கிறோம். அதுதான் ஹாலிவுட்டின் சத்தம். அது உலகத்தை கைப்பற்றிவிட்டது. யாராவது ஒருவர் ஏதாவது ஒன்றை ஹாலிவுட்டில் செய்தால், அது உலகம் முழுவதிலும் செய்யப்படுவதை நீங்கள் காணலாம். அவர்கள் நமது பெண்களின் உடைகளிலும் தலை அலங்காரத்திலும் மாதிரிகள் (Pattern) அமைந்துள்ளதை நீங்கள் கவனிக்கலாம். அவர்களுடைய உடையின் விஷயத்தில் அவர்கள் மாதிரிகளை அமைத்துள்ளனர். 27இதைக் குறித்து தேவனுடைய எக்காள சத்தம் என்ன கூறுகிறது என்பதை சபையானது அறிந்திருக்க வேண்டும். இதில் அதிகப்படியான குழப்பம். ஏனெனில் நீங்கள் மற்றவர்கள் அதை செய்வதைக்கண்டு அவர்களை உதாரணங்களாக எடுத்துக் கொள்கிறீர்கள். நீங்கள் அப்படிப்பட்ட ஒரு உதாரணத்தை உங்கள் மாதிரியாக வைத்துக் கொண்டு செயல்படாதீர்கள். ஏனெனில் அவை அழியக் கூடியவை. நீங்கள் எப்பொழுதும் தேவனுடைய சத்தம் அதைக் குறித்து என்ன சொல்கிறது என்பதற்கு செவி கொடுங்கள். பின்னும் நாம் ஹாலிவுட்டைப் பார்ப்போமானால் அவர்கள் அநேக காரியங்களை கண்டு பிடிக்கின்றனர். நாம் வேறு காரியத்திற்கு போகும் முன்பு இதைப் பற்றி சிறிது நேரம் பேசிவிடுகின்றேன். சமீபத்தில் ஹாலிவுட்டிலிருந்து ஒன்று வெளி வந்தது. ஹாலிவுட்டிலிருந்த ஒரு மனிதன்... அவனுக்கு விரோதமாக எனக்கு ஒன்றுமில்லை, அவனுக்காகவும் கிறிஸ்து மரித்தார், ஆனால் உங்களுக்கு காண்பிக்கவே இதை கூறுகிறேன். அவர்கள் ஒன்றை கண்டுபிடித்தனர். அதை சிறு பிள்ளைகள் ———————————- 'ஹலோ ஹப்' என்று அழைப்பது வழக்கம் - அப்படி ஏதோ ஒரு பெயர். நீங்கள் எப்பொழுதாவது அந்த சிறு பிள்ளைகளில் அது உண்டாக்கின அவலட்சணத்தையும் அதைத் தொடர்ந்த காரியங்களையும் கவனித்ததுண்டா ? அது சரியல்ல. (ஹ லா ஹப் என்பது ஒரு வளையத்தை இடுப்பில் மாட்டிக்கொண்டு. இடுப்பையும் உடலையும் நெளித்து அதை சுற்றச் செய்யும் ஒரு விளையாட்டு - தமிழாக்கியோன்). 28ஹாலிவுட் துப்பாக்கிச் சண்டையிடுபவர்களால் நிறைந்துள்ளது. சரித்திரம் அறிந்தவர் எவரும், முன்காலத்தில் துப்பாக்கி சண்டையிட்ட ஆட்கள் - ஆல் கபோன், டில்லிங்கர் போன்றவர் - நாணயமான குடிமக்கள் அல்ல, அவர்கள் துரோகிகள் என்பதை அறிவர். தொலைகாட்சியில் 'துப்பாக்கி புகை' என்று அவர்கள் அழைக்கும் ஒரு தொடர் நிகழ்ச்சி காண்பிக்கப்படுகின்றது. அதை நான் 'மானிட்டரில்' அன்றொரு நாள் கேட்டேன். அதில் நடிக்கும் ஆர்னஸ் என்பவன் - அப்படி ஏதோ ஒன்று. அவன் பெயர் எனக்கு மறந்துவிட்டது... அவன் கான்சாஸில் 'ஷெரீ'ப்பாக இருந்த மாட்டில்லியன் என்பவனின் பாகத்தை ஏற்று நடிக்கிறான். இந்த மாட்டில்லியன் மிகவும் பொல்லாதவன். அவன் டாட்ஜ் நகரத்தை விட்டு வெளியே சென்று புதரில் புதுங்கியிருந்து இருபத்தெட்டு அப்பாவி மக்களை முதுகில் சுட்டுக் கொன்றவன். யாராகிலும் ஒருவர் அவனிடம் வந்து ஒரு குறிப்பிட்ட துஷ்டன் அவ்வழியே வருகிறான் என்று கூறினால், அவன் காத்திருந்து அந்த மனிதன் வரும்போது அவனை முதுகில் சுட்டுக் கொன்றுவிடுவான். அவன் ஒரு பெரிய வீரனாக மதிக்கப்படுகிறான், அது பாவத்தை முற்றிலுமாக மகிமைப்படுத்தும் ஒரு செயல். நமது நாட்டிலுள்ள சிறுவர்களுக்கு இயேசு கிறிஸ்துவைக் குறித்த விஷயத்தைக் காட்டிலும் மாட்டில்லனைக் குறித்த விஷயங்கள் அதிகம் தெரிந்துள்ளன. அந்த கடைகள், பத்து செண்டு கடைகள், துணிகளை விற்கும் பிரிவில் சிறு விளையாட்டு துப்பாக்கிகளும் தொப்பிகளும் எல்லாவிடங்களிலும் தொங்கவிடப்பட்டுள்ளன. அவைகளை நீங்கள் எங்கும் வாங்கலாம். அவற்றை அணிவதனால் தவறில்லை, இதை உங்களிடம் எடுத்துக் கூறுகிறேன், பாருங்கள், வியாபார உலகம் அந்த கருத்தை எடுத்துக்கொண்டு கோடிக் கணக்கான டாலர்கள் சம்பாதிக்கிறது. 29நாம் 'பரி. பாட்ரிக் நாள்' என்று ஒரு நாளை அனுசரிக்கிறோம். நமக்கு மார்க்க சம்பந்தமான விடுமுறைகள் உள்ளன. வியாபார உலகம் இவைகளை எடுத்துக்கொண்டு கோடிக் கணக்கான டாலர்கள் சம்பாதிக்கின்றது. 'தாய் நாளில்' ஒரு கொத்து மலர்களை தாய்க்கு அனுப்புகிறோம். ஒவ்வொரு நாளும் தாயை கெளரவிக்கும் நாளாக இருக்க வேண்டும். அவர்கள் எங்காவது தனியாக இருந்தால், அவர்களை சென்று பாருங்கள். அவர்களுக்கு நீங்கள் மலர்களை அனுப்புவதை விட அல்லது வேறெந்த செயலையும் விட அது அதிக விலையேறப்பெற்றதாய் இருக்கும். ஆனால் பாருங்கள், அவர்கள் பணம் சம்பாதிப்பதற்காக அப்படிப்பட்ட ஒரு நாளை உபயோகப்படுத்திக் கொள்கின்றனர். அது ஒரு சத்தம், அதனுடன் நாம் கலந்து விடுகிறோம். அது உண்மையில் சரியல்ல. ஆனால் அதைக்குறித்து நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? பாருங்கள், நாம் வெறுமனே... உங்களிடம் ஒரு முக்கியமான காரியத்தை கூற முயன்று கொண்டிருக்கிறேன் - நான் நம்புவதை. தேவனுடைய சத்தம் மிகவும் அபூர்வமாயுள்ளது. 30அவர்கள் அதை தொடங்கிவிடுகிறார்கள் என்று நாம் காண்கிறோம். நமது இளைஞர்கள் 'ரிக்கி', 'எல்விஸ்' என்னும் பெயர்கள் கொண்டுள்ளதை நீங்கள் கவனித்ததுண்டா? உங்கள் பிள்ளைக்கு அவ்வாறு பெயரிட்டிருந்தால், அதை உடனே மாற்றுங்கள். வேண்டுமானால் அவனை 'ஒன்று', 'இரண்டு' என்று அழையுங்கள். அந்த பெயர் வேண்டாம், அது மிகவும் கொடுமையானது... நீங்கள், “பெயரினால் என்ன வரப்போகிறது'' எனலாம். ஆனால் பெயர் முக்கியம் வாய்ந்தது. உங்கள் பெயர் உங்கள் வாழ்க்கையின் குணத்தைக் காட்டுகிறது. ''சகோ. பிரன்ஹாமே, நீங்கள் எண் ஜோதிடம் (numeralogy) பற்றி கூறுகிறீர்கள்''. இல்லை, நான் அதை பற்றி கூறவில்லை. நான் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதையே எடுத்துக் கூறுகிறேன். யாக்கோபு தன் பெயருக்கேற்ப எத்தன், ஏமாற்றுக்காரனாக வாழ்ந்தான். தேவன் அவனை மாற்றினபோது, அவனுடைய பெயரையும் மாற்றினார். தேவன் சவுலை பவுலாக, சீமோனை பேதுருவாக மாற்றினார். பெயருக்கும் இயல்புக்கும் நிச்சயமாக தொடர்பு உண்டு. ரிக்கி, எல்விஸ் என்பவை நவீன அமெரிக்க பெயர்கள். அவை ஒரு பிள்ளையை தானாகவே அதில் ஆழ்த்தி விடுகின்றது. நான் சொல்லுவதன் அர்த்தம் புரிகிறதா? 31நான் நம்புகிறேன்... நான் ஒன்றைக் குறித்தே அதிக நேரம் பேசிக் கொண்டிருக்காமல், இதிலிருந்து விலகி விடுவது நல்லது (நான் என்ன கூறுகிறேன் என்பது புரிகிறதா?). இவையனைத்தும் சாதாரண ஜனங்களால் புரிந்து கொள்ள இயலவில்லை. அவர்கள் அதை கிரகித்துக் கொள்வதில்லை. ஏனெனில் அவர்கள் ஒரே போக்கில் சென்று கொண்டிருக்கின்றனர். அந்த சத்தங்களுக்கு மாத்திரமே அவர்கள் செவி கொடுக்கின்றனர். தத்துவஞானிகள், கம்யூனிஸ்டுகள் இவர்களின் சத்தமும் உள்ளது. அவர்களால் செய்யமுடியாத ஒன்றைக் குறித்து அவர்கள் வாக்குறுதி அளிக்கின்றனர். ஆயினும் அமெரிக்க ஜனத்தொகையில் ஒரு பெரிய சதவிகிதம் கம்யூனிஸக் கொள்கையினால் பீடிக்கப்பட்டுள்ளனர். நான் கம்யூனிஸத்திற்கு - இல்லை, கம்யூனிஸ நாடுகளுக்கு - சென்றிருக்கிறேன்; ஜெர்மனிக்கு, பெர்லினுக்கு கிழக்கு பாகத்தில் வெளியரங்கமாகத் தெரியக் கூடிய பெரிய வீடுகளில் அவர்கள் வசிக்கின்றனர். நீங்கள் உள்ளே சென்று பார்த்தால், அவை கட்டிமுடிக்கப்படாத நிலையில் உள்ளன. அது ஒரு பொய்யான பொருளாதாரம். அவர்கள் ஒன்றை வேகமாக அடைய முயற்சிக்கிறார்கள். 32கம்யூனிஸத்தின் பிறப்பிடமான ரஷியாவில் அநேக ஆண்டுகளுக்கு முன்பு நான் இளம் பிரசங்கியாக இருந்தபோது - முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன். அப்பொழுது நாசிசம், பாஸிஸம், கம்யூனிஸத் தத்துவங்கள் எழும்பிக் கொண்டிருந்தன. நான், “கர்த்தரின் நாமத்தினால் உரைக்கிறேன். இவை யாவும் கம்யூனிஸத்தில் முடிவடையும்” என்றேன். ஆனால், நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா? நாம் மாத்திரம் ஏற்றுக்கொள்வோமானால் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள தேவன் ஒரு வழியை நமக்கு வைத்திருக்கிறார். ரஷியாவின் ஜனத்தொகையில் ஒரு சதவிகிதம் மாத்திரமே கம்யூனிஸத்தை ஆதரிப்பவர். ஆனால் அந்த சதவிகிதம் தான் ஆதிக்கம் கொண்டவர்கள். கம்யூனிஸத்தின் ஒரு சதவிகிதம் மாத்திரமே... அதாவது ரஷியாவின் ஒரு சதவிகிதம் மாத்திரமே கம்யூனிஸ்டுகள். ஆனால் அவர்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர். 33ஹாலிவுட்டைப் பொறுத்த வரையிலும் அப்படித்தான். ஆனால் அவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பாகம், அல்லது மூன்றில் இரண்டு பாகம் சபைகளுக்கு சென்று சபை அங்கத்தினர்களாக உள்ளனர். அந்த ஸ்தாபனங்கள் அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றன. இன்றைக்கு அந்நாடுகளிலுள்ள கம்யூனிஸத்திற்கு தேவை என்னவெனில், தேவனுடைய சத்தம் அவர்கள் மத்தியில் எழுவதே. அப்பொழுது அது அதை வெட்கத்திற்குள்ளாக்கும். பின்லாந்தில் இறந்து போன அந்த சிறுவன் உயிரோடெழுப்பப்பட்ட அந்த நாளில், அவர்கள் என்னை மூன்று சதுரங்களுக்கு அப்பால் கொண்டு வந்தார்கள். அங்கு இறந்த அந்த சிறுவன் உயிரோடெழுப்பப்பட்டான். அங்கு கம்யூனிஸ்டு போர் வீரர்கள், ரஷியர்கள், ரஷிய இராணுவ மரியாதை செலுத்தினவர்களாய் நின்றுகொண்டிருந்தனர். அவர்களுடைய கன்னங்களில் கண்ணீர் வடிந்தது. அவர்கள், “மரித்தோரை உயிரோடெழுப்பும் அப்படிப்பட்ட தேவனை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்'' என்றனர். அது கத்தோலிக்க சபை, லூத்தரன் சபை, மற்றெல்லா ஸ்தாபனங்களின் அலட்சியத்தினால் விளைந்த ஒன்று, அவர்கள் எல்லா பணத்தையும் எடுத்துக்கொண்டு தங்கள் ஸ்தாபனங்களை கட்டினார்களேயன்றி, மக்களுக்கு ஒன்றுமே அளிக்கவில்லை. அவர்கள் மற்றவர்களைப் போலவே வாழத் தலைப்பட்டனர். அவர்களுக்கு... ரஷியாவுக்கு தேவை என்னவெனில், அவர்கள் வாயை அடைக்கக் கூடிய தேவனுடைய வார்த்தையைக் கொண்ட ஒரு தீர்க்கதரிசி காட்சியில் எழும்புவதே. அப்பொழுது அந்த தொண்ணூறு சதவிகிதம் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அமெரிக்காவுக்கு தேவை என்னவெனில், எழுந்து நின்று ஹாலிவுட்டையும், இயேசுவின் நாமத்தினால் செய்யப்படும் இந்த செயல்களையும் கண்டிக்கும் தேவனுடைய தீர்க்கதரிசியின் சத்தமே. அப்பொழுது பரிசுத்த ஆவி சபை வளரும். பாருங்கள், அதிகமான குழப்பம், அதற்கு விரோதமாக எழும்பியுள்ள அநேக மாறுபாடான சத்தங்கள். 34ஸ்தாபன சபை, அதன் சத்தம். ஒவ்வொன்றும் அதிக உறுப்பினர்களைப் பெற விரும்புகின்றது. பாப்டிஸ்டுகள் எல்லோரையும் தங்களிடம் இழுத்துக்கொள்ள விரும்புகின்றனர். மெதோடிஸ்டுகளும் எல்லோரையும் பெற விரும்புகின்றனர். அப்படியே பிரஸ்பிடேரியன்களும் இப்படிப்பட்டவை நம்மிடயே உள்ளன. கத்தோலிக்கர்கள் எல்லோரையும் எடுத்துக் கொள்ளவார்கள் போல் தோன்றுகிறது. அவர்கள் அதை செய்வார்கள். அது வேதாகமத்திலிருந்து தொனிக்கும் தேவனுடைய சத்தம். அவர்கள் ஆளுவார்கள். ஆனால் உன்னதமான தேவன் முடிவில் ஆளுகை செய்வார். ஒரு நாள் பரிசுத்தவான்கள் உலகத்தை ஆளுவார்கள் என்று வேதம் கூறுகிறது. அவர்கள் ஆளுகை செய்வார்கள். இப்படிப்பட்ட பல பயங்கரமான சத்தங்கள் பிறகு கள்ளத் தீர்க்கதரிசியின் சத்தம் ஒன்றுண்டு. அது மிகவும் பயங்கரமான சத்தம் - தன்னை தீர்க்கதரிசியென்று அழைத்துக் கொள்ளும் ஒருவன். தீர்க்கதரிசி என்பவன் ஒரு பிரசங்கி. நவீன மொழியில் “தீர்க்கதரிசி” என்னும் சொல், “பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் பிரசங்கிக்கும் ஒருவன்” என்று பொருள்படும். தன்னை தீர்க்கதரிசியென்று அழைத்துக் கொண்டு, அதே சமயத்தில் தேவனுடைய வார்த்தையை - தேவனுடைய சத்தியத்தை - மறுதலிக்கும் ஒருவன் உண்டு. இப்படியாக பல சத்தங்கள். 35சிறிது நேரத்துக்கு முன்பு, நான் எப்படி இங்கு வரவேண்டுமென்று ஒரு சகோதரன் எனக்கு வழி காண்பித்துக் கொடுத்தார். ஆனால் நான்... நான் ஏன் தெருவில் சென்று, பிறகு திரும்பி இங்கு வந்தேன் என்று அவர் வியந்திருப்பார். சகோதரனே, நீங்கள் இங்கிருப்பீர்களானால், எதோ ஒன்று என் செவிகளில் விழுந்தது. அது நமது கறுப்பு நிற நண்பர்கள் - நீக்ரோக்கள். அவர்களுக்கு ஒரு கோவில் இங்குள்ளது. அவர்கள் அதை 'எலியா முகம்மது'' என்றழைக்கின்றனர் - அப்படி ஏதோ ஒரு பெயர். இளம் “எலியா முகம்மது” அவர்கள் ஒரு சத்தத்துடன் எழும்பி, கறுப்பு நிறத்தோரை குழப்பத்திலிருந்து வெளியே கொண்டு வரப்போகும் சத்தம் இவர்கள்தான் என்கின்றனர், பாருங்கள், அந்த முஸ்லிம்களின் மசூதி இங்குள்ளது. அதன் அடிப்படையே தவறு என்பதை உங்களால் காணமுடியவில்லையா? 36கறுப்பு நிறத்தோரே, நீங்கள் முகம்மதிய மார்க்கத்துக்கு செல்லாமல், வெள்ளையர் , பழுப்புநிறத்தோர், மஞ்சள் நிறத்தோர் செய்வது போல் கிறிஸ்துவினிடம் - வேதம் போதிக்கும் கொள்கைகளுக்கு - வாருங்கள். முகம்மதிய மார்க்கம் வார்த்தைக்கு விரோதமானது. தென்ஆப்பிரிக்காவிலுள்ள டர்பனில், ஒரே நேரத்தில் பத்தாயிரம் முகமதியர்களை கிறிஸ்துவினிடம் வழிநடத்தும் சிலாக்கியம் எனக்கு கிடைத்தது. உங்கள் மார்க்கம் மனோதத்துவ உணர்ச்சியை தவிர வேறொன்றையும் தோன்றச் செய்வதில்லை. மனோதத்துவம் வார்த்தையை மறுதலிக்கும் போது, அது தவறாகிவிடுகின்றது. அது விளங்காத சத்தமிடுகிறது. தேவனுடைய வார்த்தையைத் தவிர மற்றெல்லாமே ஒழிந்து போகும். ''வானமும் பூமியும் ஒழிந்து போகும், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை'' என்று இயேசு கூறினார். ஆகவே பாருங்கள், நாம் வார்த்தையில் - சத்தத்தில் - நிலைத்திருக்க வேண்டும். 37குழப்பத்தை உண்டாக்கும் பல காரியங்கள்! ஜனங்கள் எழுந்து நிற்கின்றனர். அவர்களுக்கு வார்த்தை தெரியாது, அவர்கள் சில காரியங்களைக் கூறுகின்றனர். அவை ஒரு வேளை மிகவும் நியாயமானதாக தென்படலாம். கம்யூனிஸக் கொள்கையும் மிகவும் நியாயமானதே. ''எல்லோரும் சமமானவர்கள். பணம் படைத்த முதலாளிகள் இனி இருக்க போவதில்லை, எல்லோரும் கம்யூனிஸ்டுகளே''. கம்யூனிஸக் கொள்கை தவறான எழுப்புதல் என்று என்றைக்காவது நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா? அது எதை மாதிரியாகக் கொண்டு தோன்றினது? ''இரண்டு ஆவிகளும் ஒன்றோடொன்று மிகவும் நெருங்கியிருந்து, “கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்'' என்று இயேசு கூறினார். பிசாசு பெற்றுள்ள ஒவ்வொன்றும், தேவன் சிருஷ்டித்தவைகளின் தாறுமாறான நிலையே. பாவம் என்பது நீதி தாறுமாறாக்கப்படுதல். பொய் என்பது உண்மை தவறாக எடுத்துரைக்கப்படுதல். விபச்சாரம் என்பது தேவன் நமக்கு நியமித்துள்ள செயல் தாறுமாறாக்கப்படுலே, அவிசுவாசம் அனைத்தும் விசுவாசத்தின் தாறுமாறான நிலை. தாறுமாறான நிலையைப் பெற நீங்கள் சத்தியத்தை மறுதலிக்க வேண்டும். பாருங்கள், இந்த சத்தங்களை சீர்தூக்கிப் பாருங்கள். அவைகளை வார்த்தையைக் கொண்டு சோதித்து அது சத்தியமா இல்லையா என்று அறியுங்கள். 38ஓ, இன்றுள்ள சத்தங்களைக் குறித்து நாம் பேசிக் கொண்டே போகலாம். ஆனால் நேரமாகிவிட்டது. பல சத்தங்கள் உள்ளதால் என்ன செய்வதென்று மக்களுக்குத் தெரியவில்லை. ஒரு பாப்டிஸ்டு போதகர் பிரசங்கிப்பதை மெதோடிஸ்டுகள் கேட்டு, பாப்டிஸ்டு சபைக்கு சென்றுவிடுகின்றனர். அங்கு சிறிது காலம் தங்கியிருந்து, பிறகு லூத்தரன் சபைக்கு செல்கின்றனர். பெந்தெகொஸ்தேயினரிடையே வெவ்வேறு பிரிவு. அவர்கள் ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவுக்கு ஓடுகின்றனர். இப்படியாக இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். நீங்கள் நிலையற்றவர்கள் என்பதை அது காண்பிக்கிறது. அவருடைய சத்தத்துக்கு செவி கொடுங்கள். அந்த சத்தம் இதோ காகிதத்தில் எழுதி வேதமாக வைக்கப்பட்டுள்ளது. அந்த சத்தம் உண்மையானால், அது உறுதிபடுத்தப்படும். என்ன செய்வதென்று சபை உலகிற்கு தெரியவில்லை. அரசியல் உலகம் குழப்பத்திலுள்ளது. எல்லாமே குழப்பமாக உள்ளது. ஆட்கள் இங்கும் அங்கும் ஓடித் திரிகின்றனர். 'ஜாக்கெட்', 'கோட்' போன்ற ஏதோ ஒன்று திடீரென்று எழும்புகிறது. நான் ரோமாபுரிக்கு சென்றிருந்த போது, இயேசுவின் கைகளில் கடாவப்பட்டதாக சான்றுகள் உள்ள பத்தொன்பது ஆணிகளை அவர்கள் வைத்துள்ளதைக் கண்டேன். மூன்று ஆணிகளே கடாவப்பட்டன. இருப்பினும், பத்தொன்பது ஆணிகளுக்கு அவர்கள் சான்றுகள் வைத்துள்ளனர். யாரிடம் அந்த ஆணி உள்ளது என்பதனால் என்ன பயன்? நாம் ஆணிகளை வழிபட வேண்டுமென்று கிறிஸ்து அவைகளை விட்டுச் செல்லவில்லை. அவர் தமது வார்த்தையின் மூலம் பரிசுத்த ஆவியை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார். “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும் அவர்கள் உண்மையான ஆணியைப் பெற்றிருப்பார்கள்''. அப்படியா எழுதப்பட்டுள்ளது? ”விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். நான் தொடங்கின ஸ்தாபனத்தை அவர்கள் சேர்ந்திருப்பார்கள்'' என்றா? அவர் ஒரு ஸ்தாபனத்தையும் தொடங்கவில்லை, பாருங்கள், சத்தம் எவ்வளவு மாறுபாடாய் உள்ளதென்று? 39அப்படியல்ல. “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்”. அது தான் வார்த்தை. ''நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள், அது அவர்களுக்கு தீங்கு செய்யாது. சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அவர்களைச் சேதப்படுத்தாது. வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்“. இவைகளும் இன்னும் மற்ற வேத வசனங்களும் நிறைவேறுகிறதா என்பதை கவனியுங்கள். ஆனால் இந்த அடையாளங்கள் மாத்திரம் அதை உறுதிப்படுத்தாது. இல்லவே இல்லை. அங்கு தான் பெந்தெகொஸ்தேயினராகிய நாம் தவறான வழியில் சென்றுவிட்டோம். அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே, உமது நாமத்தினாலே மகத்தான காரியங்கள் செய்தேன் அல்லவா? உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தேன் அல்லவா? உமது நாமத்தினாலே இவைகளையெல்லாம் செய்தேன் அல்லவா? என்பார்கள்'' என்று இயேசு கூறவில்லையா? ஆனால் அவரோ, “அக்கிரமச் செய்கைக்காரனே, என்னை விட்டு அகன்று போ. நான் ஒருக்காலும் உன்னை அறியவில்லை'' என்பார். என் சகோதரிகளே, சகோதரரே, நான் ஏன் இந்த சந்ததியை இப்படி கண்டித்து குற்றஞ்சாட்டுகிறேன் என்பதை உங்களால் காண முடிகிறதா? நீங்கள் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசலாம். நீங்கள் சபையைச் சுற்றிலும் ஆவியில் நடனமாடலாம். ஆனால் இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை. 40முகம்மதியர் இவ்வாறு நடனமாடுவதை நான் பார்த்திருக்கிறேன்... மந்திரவாதிகளின் ஸ்தலத்தில், மந்திரவாதிகள் எழுந்து நின்று அந்நிய பாஷைகள் பேசி அவைகளுக்கு அர்த்தம் உரைத்து, என்ன நடக்கப் போகிறது என்று கூறுவதையும் நான் பார்த்திருக்கிறேன். அது அப்படியே நடந்தது. ஒரு பென்சிலும் கூட அந்நிய பாஷைகளைத் தானாகவே எழுதுவதையும் நான் பார்த்திருக்கிறேன். அதை ஒருவன் மாத்திரமே படிக்க முடியும். அவன் பிசாசை சேர்ந்தவன். நீங்கள் நித்தியத்திற்கு செல்லும் இடம் இப்படிப்பட்ட உணர்ச்சிகளை அடிப்படையாக கொண்டிருக்க முடியாது. சாத்தானால் இந்த உணர்ச்சிகளில் எதையும் பாவனை செய்யக் கூடும். கிறிஸ்துவை நீங்கள் அறிந்து கொள்ளும்போது, ஏதோ ஒன்று உங்கள் வாழ்க்கையில் மாறுதலை உண்டாக்குகிறது. உங்கள் வாழ்க்கையை சீர்தூக்கி பார்த்து, அதை வார்த்தையின்படி அமைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எந்நிலையில் இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் நிச்சயம் கணக்கெடுத்து பார்க்க வேண்டும். 41இந்த பாவனைகள், கள்ள சத்தங்கள், இப்படிப்பட்ட காரியங்கள் எழும்பின போதிலும், இயேசு, ''ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு என்னைக் பின்பற்றினால்“ என்கிறார். அவரே வார்த்தை. கவனியுங்கள். இந்த சத்தங்களின் மத்தியிலும் அவருடைய கட்டளை என்னவென்றால்: இந்த சத்தங்களைக் குறித்து பேசுவதென்றால் மணிக் கணக்காகும் என்று நான் கூறினேன். அது மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. அது பரிதாபமான காரியம். மேலும் உங்களுக்கு இரண்டாம் தருணம் அளிக்கப்படுவதில்லை, இதை நீங்கள், இப்பொழுதே ஏற்றுக் கொள்ளவேண்டும். இன்றிரவு உங்களுக்குத் தருணம் கிடைக்காமல் போகலாம், நாளை ஒருவேளை தருணம் கிடைக்காமல் போகலாம், அந்த தருணம் இப்பொழுதே! ”என் சத்தத்தை கேட்பீர்களானால், வனாந்தரத்தில் கோபம் மூட்டின போது நடந்தது போல், உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள். இப்பொழுதே அந்த நேரம். ''ஒருவன் என் சத்தத்தைக் கேட்டால், இதுவே அநுக்கிரக நேரம்''. இந்த குழப்பம் அனைத்தின் மத்தியிலும் அவருடைய சத்தம் இருந்து வருகிறது என்பதை அது காண்பிக்கிறது. அவருடைய சத்தம் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது! அவருடைய சத்தம் எப்பொழுதும் இருக்கும். இதோ அது உள்ளது. ''வானமும் பூமியும் ஒழிந்து போம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை''- அவருடைய வார்த்தை. 42நாம் இன்னும் ஐந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டு வேகமாக பார்க்கலாம். அவ்வளவு நேரம் - இன்னும் சில நிமிடங்கள் - உங்களால் தங்க முடியுமா? நான் வேகமாக முடிக்கிறேன். அவருடைய சத்தத்தைக் கேட்டு அதற்கு கீழ்ப்படிந்தவர் சிலரை நாம் பார்ப்போம் - அவர்களை அது எப்படி நடந்து கொள்ளச் செய்தது, அவர்களை என்ன செய்யத் தூண்டியது என்று. உங்களிடம் நேரடியாக பேசவேண்டும் என்பதற்காக, இங்கு நான் குறித்து வைத்துள்ள அநேக வேத வசனங்களை விட்டுவிடப் போகின்றேன். அவர்களுடைய வாழ்க்கையை அது எப்படி மாற்றினது, அவர்களைக் குறித்து மற்றெல்லாமே, அவர்கள் எப்படி வினோதமானவர்களாக (Oddball) இருந்தார்கள் என்றெல்லாம் - தேவனை விசுவாசித்த எவனும் வினோதமானவனாக கருதப்பட்டான். ஏனெனில், நீங்கள் உலகத்தின் போக்கில் சென்று கொண்டிருந்தால், உங்களில் ஏதோ தவறுண்டு. கிறிஸ்தவனாயிருக்க, நீ வினோதமானவனாகவே இருக்க வேண்டும். ''கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள். அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. வேகமாக பார்ப்போம். நாம் முடிக்கப் போகும் நேரத்தில் கூர்ந்து கவனியுங்கள். 43மாலையில் குளிர்ச்சியான வேளையில் ஆதாம் அவருடைய சத்தத்தைக் கேட்டான். அவன் அவருடன் ஐக்கியம் கொண்டிருந்தான். அவன் மேல் அப்பொழுது எவ்வித ஆக்கினைத் தீர்ப்பும் இருக்கவில்லை. அவன் தேவனுடைய சத்தத்தைக் கேட்டான். அவன், “பிதாவே, நான் படுத்துக் கொண்டு நித்திரை செய்வேன்'' என்றான். அவன் படுத்துக் கொண்டான். ஏவாள் அவன் கரங்களில் இருந்தாள். சிங்கம், புலி, மற்ற காட்டு மிருகங்கள் அவனைச் சுற்றி படுத்துக் கொண்டிருந்தன. அங்கு தீங்கு எதுவுமில்லை. அங்கு வியாதிப்பட வழியேயில்லை. அவர்கள் காலையில் தூக்கத்தை விட்டு எழுந்திருப்பார்களோ என்று பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஆதாம், அவன் கேட்க வேண்டிய விதத்தில், தேவனுடைய சத்தத்தைக் கேட்டான். ஆனால் ஒரு நாள் அவன் தன் மனைவியின் சத்தத்தைக் கேட்டான். அதை சிறிது நேரம் தனியே விட்டுவிடுகிறேன். அவன் தவறான சத்தத்துக்கு செவி கொடுத்தான். அது பூமியில் அவன் மிகவும் நெருங்கியிருந்த அவனுடைய மனைவியின் சத்தமே. அவன் ஏன் யோபைப் போல், “நீ பயித்தியக்காரி பேசுகிறது போல பேசுகிறாய்” என்று கூறவில்லை? அவன் அப்படி செய்திருந்தால், மானிடவர்க்கம் முழுவதுமே மரிப்பதற்கு பதிலாக உயிரோடிருந்திருக்கும். அவனுடைய செயல் மானிடர்களின் போக்கையும் காலத்தையும் மாற்றிவிட்டது. அவன் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு, அவருடன் ஐக்கியங் கொண்டிருந்தான். ஆனால் அவன் திரும்பி அவனுடைய மனைவி தவறென்று அவன் எப்படி அறிந்து கொண்டான்? நினைவில் கொள்ளுங்கள், அது இனிமையாயிருந்தது. 44இன்றைக்கு நமது ஸ்தாபனம், நாம் பெற்றுள்ள செழிப்பு அனைத்தும் தேவன் நம்மை நோக்கி புன்முறுவல் செய்வதனால் விளைந்தது என்று நினைத்துக் கொண்டிருக்கிறது. அது பார்வைக்கு நலமாயுள்ளது. அன்று மிகாயா நானூறு தீர்க்கதரிசிகளுக்கு முன்பாக நின்றபோதும், அது பார்வைக்கு நலமாயிருந்தது. தேசம் முழுவதுமே அவர்களுக்கு சொந்தமாயிருந்தது. பெலிஸ்தியர், இல்லை அசீரியர், அதன் மேல் படையெடுத்தனர். அது பார்வைக்கு நலமாயிருந்தது. அந்த தீர்க்கதரிசிகள் “அங்கு போங்கள். அது நமக்குச் சொந்தம். அதை கைப்பற்றுங்கள்'' என்றனர். ஆனால் அது தேவனுடைய சத்தமல்ல. மிகாயா திரும்பி பார்த்து அந்த சத்தத்தை சபித்தான். அப்படி செய்ய வேண்டுமென்று அவன் எவ்வாறு அறிந்திருந்தான்? ஏனெனில் அவனுடைய தரிசனம் வார்த்தையையொட்டியிருந்தது. அந்த ஒரு விதத்தில் மாத்திரமே அதை நம்பி இன்று நாம் காணமுடியும். அது வார்த்தையின்படி இருக்கவேண்டும். 45நீங்கள் கவனித்தீர்களா, ஆதாம் தேவனுடைய சத்தத்துடன் கூட வேறொரு சத்தத்துக்கு - தன் சொந்த மனைவியின் சத்தத்துக்கு - செவிகொடுத்த பின்பு; சபையும் அதன் ஸ்தாபனத்துக்கு செவிகொடுத்து, வார்த்தைக்கு பதிலாக கோட்பாடுகளை புகுத்தி, அவர்கள் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் வாழ அவர்களை அனுமதித்துள்ளது. அவர்கள் சபைக்கு சென்று, ஒரு குறிப்பிட்ட சபையின் அங்கத்தினராயுள்ள வரைக்கும், அதுவே முக்கியம் வாய்ந்தது என்பது அவர்கள் கருத்து. ஒரு விசுவாசிக்கும் இவ்வுலகில் உள்ள நெருங்கிய உறவு சபையே. ஆனால் உண்மையான விசுவாசிக்கு நெருங்கிய உறவு பரிசுத்த ஆவி, தேவனுடைய வார்த்தை. ஆதாம் தன் நிலையை உணர்ந்தான் என்று நாம் காண்கிறோம். தேவனுடைய சத்தம் மறுபடியும் கூப்பிடுவதை அவன் கேட்டான். அப்பொழுது அவன் அத்தி இலைகளை உடுத்தியிருந்தான். ஆனால் அது, ''நீ ஏன் இதை செய்தாய்?'' என்னும் ஆக்கினைத் தீர்ப்பின் சத்தம். 46இன்று அமெரிக்கா; இன்று உலகில் காணப்படும் மத சம்பந்தமான ஆர்ப்பாட்டங்களால் அமெரிக்கா விழுங்கப்பட்டு அது விரைவில் தேசிய மார்க்கமாகிவிடுமோ என்று வியக்கிறேன். (ஒலிநாடாவில் காலி இடம்?ஆசி). எனக்கு முன்னால் இருப்பது எது? அது ஒலிநாடாக்கள் என்றும், அவை உலகம் முழுவதிலும் செல்லும் என்றும் அறிவேன். எங்களுக்கு ஒலிநாடா திட்டங்கள் உண்டு. ஒலிப்பதிவு செய்யப்படும் ஒவ்வொரு செய்தியும் உலகம் முழு வதிலும், மற்றெல்லா நாடுகளுக்கும் செல்கின்றது. நல்லது ,இப்பொழுது பார்ப்பீர்களானால், நீங்கள் அத்தி இலைகளை உடுத்தி நின்று கொண்டிருக்கிறீர்கள். உண்மையான தேவனுடைய சத்தம் ஒலிக்கும்போது, அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அது குழப்பமாயுள்ளது, ஆகையால் என்ன செய்வதென்று அவர்களுக்கு தெரிவதில்லை. வேகமாக, நோவா தேவனுடைய சத்தத்தைக் கேட்டான். அவனுடைய ஜீவனைக் காத்துக் கொள்ள அது அவனை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தது. அவன் தேவனுடைய போதனைகளை பின்பற்றி அதில் நிலைநின்றான். 47ஒரு மனிதன் சத்தத்தைக் கேட்டால்... இப்பொழுது கவனியுங்கள், இதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். இதை காணத்தவறாதீர்கள். ஒரு மனிதன் ஏதோ ஒரு சத்தத்தைக் கேட்டு, அது தேவனுடைய சத்தமென்றும், அது காலத்துக்கேற்றது என்றும் நிரூபிக்கப்பட்டு, அந்த மனிதனிடத்திலிருந்து அது புறப்பட்டு வருமானால், வானமும் பூமியும் ஒழிந்துபோம், ஆனால் அந்த வார்த்தையோ ஒழிந்து போகமுடியாது. நோவா தேவனுடைய சத்தத்தைக் கேட்டு உலகத்தை ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுத்தினான். அவர்கள் அவனுடைய முகத்தைப் பார்த்து கேலி செய்தார்கள். ஏனெனில் அவனுடைய செய்தி அவர்களுடைய விஞ்ஞானப் பூர்வமான சாதனைகளுடன் ஒத்துப் போகவில்லை. ஆனால் மழை பெய்து முழு உலகத்தையும் அழித்துப் போட்டது. பாருங்கள்? அவருடைய சத்தம் புறப்பட்டுச் சென்றது. விதை அங்கு புதைந்திருந்தது. ஒவ்வொரு காலத்திலும் அவ்விதமே நடந்து கொண்டு வருகிறது. சாமுவேல் தேவனுடைய சத்தத்தைக் கேட்டபோது திடுக்கிட்டான். அவன் சென்று ஏலியை - தன்னை வளர்த்து வந்த மனிதன் - ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுத்த வேண்டியிருந்தது. அவன் அவனுக்குத் தகப்பனாக இருந்து, அவனை வளர்த்து போஷித்து வந்தான். 48போதகர் சகோதரர்களே, நான் சொல்லட்டுமா? அநேக சமயங்களில் போதகர்கள் தங்கள் ஸ்தாபன அடிப்படையிலும் கோட்பாடுகளிலும் தேர்ச்சி பெற்று, தங்கள் நற்சாட்சி பத்திரங்களைப் பெற்று, அந்த ஸ்தாபனம் அவர்களுக்கு தகப்பனாயிருந்து அவர்களை வளர்த்து போஷித்து; அவர்களுக்கு சபையில் ஒரு பதவியைக் கொடுத்து சபையோருக்கு போதகராக நியமிக்கின்றது. நீங்கள் அவர்களுடைய போதகங்களுக்கு அடிபணிய வேண்டியுள்ளது. பாருங்கள்? ஆனால் உண்மையான தேவனுடைய ஊழியக்காரன் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு, அவனை வளர்த்து ஆளாக்கிய அதே தாய் ஸ்தாபனத்துக்கு வந்து, “நீங்கள் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் உங்கள் மேல் ஆக்கினைத்தீர்ப்பு வந்துள்ளது'' என்று கண்டித்துணர்த்துவது எவ்வளவு பயங்கரமான ஒரு செயலாக இருக்கும்! என்ன ஒரு காரியம்! அது சாமுவேலுக்கு கடினமாயிருந்தது. ஆனால் அவன் தீர்க்கதரிசியானதால், அதை செய்ய வேண்டியதாயிருந்தது. அது மற்றவர்களை வேதனைப்படுத்தினாலும் இல்லாவிட்டாலும், அவன் அதை எப்படியும் செய்தாக வேண்டும். 49மோசே தேவனுடைய சத்தத்தைக் கேட்டான். அவன் வேத சாஸ்திர அறிவினால் நிறைந்திருந்தான். அதன் நுணுக்கங்கள் அனைத்தும் அவன் அறிந்திருந்தான். ஆனால் அது தோல்வியடைந்தது. மோசே தேவனுடைய சத்தத்தைக் கேட்ட பின்பு, அவன் பழைய மனிதனாக இருக்கவில்லை. எந்த ஒரு மனிதனும் அப்படித்தான் பழைய மனிதனாக இருக்கமாட்டான். நீங்கள் சத்தம் பேசுவதை உங்கள் காதுகளில் கேட்கக்கூடும். ஆனால் அந்த சத்தம் உங்கள் இருதயத்தில் பேசும் போது மாத்திரமே நீங்கள் உண்மையில் கேட்கிறீர்கள். உங்கள் கண்களால் காண்கிறீர்கள், உங்கள் இருதயத்தினால் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் ஒன்றைக் கண்டு, “என்னால் அதை காண முடியவில்லையே” என்னும் போது, அதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்னும் அர்த்தத்தில் கூறுகிறீர்கள். அநேக முறை உங்கள் காதுகள் உண்மையான தேவனுடைய சத்தத்தைக் கேட்கின்றன. ஆனால் வாத்தின் முதுகிலிருந்து தண்ணீர் விழுந்துவிடுவது போல், உங்களை விட்டு அது விலகிவிடுகின்றது. ஆனால் நீங்கள் உண்மையாக கேட்கும்போது, உங்கள் இருதயத்தினால் கேட்கிறீர்கள். 50மோசே வேதசாஸ்திர அறிவைப் பெற்றிருந்தும், தேவனுடைய சத்தத்தை கேட்கவில்லை. ஆனால் ஒருநாள் தேவன் இந்த எண்பது வயது ஆடு மேய்ப்பவனை ஒருபுறம் அழைத்து அவனோடு பேசினார். அவன் அதை கிரகித்துக் கொண்டான். அவர் தேவன் என்பதை நிரூபித்தார். அவர் மோசேக்கு செய்த முதல் காரியம், “என் வாக்குத்தத்தத்தை நினைவு கூர்ந்து இறங்கி வந்தேன்'' என்று கூறி தமது வார்த்தையை உறுதிப்படுத்தினதே. கடைசி நாட்களுக்கென்று அவர் இதை தான் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார் - அதாவது புறஜாதிகளிலிருந்து ஒரு கூட்டம் மக்களை எழுப்பப்போவதாக. அந்த வாக்குத்தத்தங்கள் அனைத்தும் அவர் நிறைவேற்றுவார். அவர்,“மோசே, இதை நான் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறேன். உன் பாதரட்சையை கழற்றிபோடு” என்றார். வேறு விதமாக கூறினால், ''அதை கனப்படுத்து''. பின்பு, ''உன் கோலைத் தரையிலே போடு...“ வனாந்திரத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு உலர்ந்த கோல் சர்ப்பமாக மாறினது. மோசே அதை பிடித்த போது, அது பழைய நிலைக்குத் திரும்பினது. பாருங்கள்? அது தேவன் என்பதை அவன் அறிந்து கொண்டான். ஏனெனில் தேவன் அவனிடம் - அவர் பேசின வார்த்தை அவனிடம், ”உன் கையிலுள்ள கோலை தரையிலே போடு'' என்றது. அது தேவனுடைய வார்த்தை. அதையே நீங்கள் செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டாம். ஏனெனில் அது உங்களுக்குண்டான தேவனுடைய வார்த்தை அல்ல. அது மோசேக்குண்டான தேவனுடைய வார்த்தை. இதோ தேவன் உங்களுக்கு அளிக்கும் வார்த்தை தேவன் மோசேயிடம், “உன் கோலை தரையிலே போடு'' என்றார். அது சர்ப்பமாக மாறினது. அவர், ''உனக்கு பயமாயிருக்கிறதா? அதன் வாலைப்பிடி'' என்றார். அது மீண்டும் கோலாக மாறினது. அது அவனுக்குண்டான தேவனுடைய வார்த்தை. தேவன் என்ன செய்தார்? அவர் தமது வார்த்தையை உறுதிபடுத்தி நிரூபித்தார். 51சில மாதங்களுக்கு முன்பு எனக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. ஓ, அது ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு முன்பு, ஒரு ஆண்டுக்கும் அதிகமாக. ஒரு ஸ்திரீ ஒரு பாப்டிஸ்டு போதகருடனும் ஒரு பெந்தெகொஸ்தே போதகருடனும் தொலைபேசியில் இணைக்கப்பட்டவளாய், என்னுடன் தொலைபேசியில் பேசினாள். அவள், ''சகோ. பிரன்ஹாமே கர்த்தர் என்னை ஒரு பெண் தீர்க்கதரிசியாக நியமித்திருக்கிறார்“ என்றாள். நான், ''நல்லது'' என்றேன். அவள், “உங்களுக்குத் தெரியுமா, என் ஊழியம் தேவனால் உண்டானது என்று நீர் சாட்சி கொடுத்ததாக நான் கேள்விப்பட்டேன்'' என்றாள். நான் அப்படி ஒருக்காலும் செய்ய மாட்டேன். ஏனெனில் அது தேவனுடைய வார்த்தைக்கு முரணான ஒன்று. ஆகவே நான், ''அம்மா, அது தவறு. உன்னை எனக்கு தெரியவே தெரியாது'' என்றேன். பாப்படிஸ்டு போதகர் என்னுடன் பேசினார், பெந்தெகொஸ்தே போதகர்களும் என்னுடன் பேசினர். அவள், “இங்கு நான் கூட்டம் நடத்துகிறேன். கர்த்தர் மகத்தான காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்'' என்றாள். ''அதற்காக நான் அவருக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன்'' என்றேன். அவள் சொன்னாள். நான் அவளிடம் “கர்த்தர் உன்னிடம் ஏதாவது கூறினாரா?'' என்று கேட்டேன். அவள், “ஆம், எனக்கு ஒரு பெரிய திட்டமே உள்ளது” என்றாள். நான், ''மிகவும் அருமை. உன் திட்டம் என்ன? கர்த்தர் உன்னிடம் என்ன கூறினார்?'' என்று கேட்டேன். அவள், “தேவன் என்னிடம், ”இன்னின்ன தேதியில் அரிசோனாவிலுள்ள பினிக்ஸுக்கு செல். உனக்கு நான் காணாமற் போன டச்சுக்காரனின் தங்க சுரங்கத்தைக் கொடுக்கப் போகிறேன். அங்குள்ள தங்கத்தை நீ தோண்டியெடுத்து, உலகம் பூராவும் மிஷனரிமார்களை உன் செலவில் அனுப்பப் போகிறாய் என்றார்'' என்றாள். காணாமற்போன டச்சுக்காரனின் தங்கச்சுரங்கம் ஒரு கட்டுக்கதையென்று நம்மெல்லோருக்கும் தெரியும். நான் அவளிடம், ''அது தேவனா இல்லையா என்று எப்படி கண்டு கொள்வது என்று உனக்குச் சொல்லுகிறேன். அந்த நாளில் அங்கு போ. நீ காணாமற்போன டச்சுக்காரனின் தங்க சுரங்கத்தை கண்டு பிடித்தால், அது தேவன் உரைத்தது. நீ கண்டுபிடிக்காமல் போனால், மனந்திரும்பி, அந்த பொய்யின் ஆவியை உன்னை விட்டு விலக்கு'' என்றேன். அப்படித் தான் அது தேவனா இல்லையா என்று கண்டு கொள்ள முடியும். 52தேவன் மோசேயிடம், ''உன் கோலை தரையில் போடு. அது சர்ப்பமாக மாறும்'' என்றார். அவன் அப்படியே செய்தான். அவர், “அதை கையிலெடு. அது மறுபடியும் கோலாக மாறும்'' என்றார். அவன் அப்படியே செய்தான். தேவன் இக்கடைசி நாட்களில் ஒரு ஊழியத்தை குறித்த வாக்குத்தத்தம் செய்திருப்பாரானால், அவர் சொன்னபடியே அதை நிறைவேற்றி உறுதிப்படுத்துவார். அப்பொழுது நீங்கள் சரியான சத்தத்தை பெற்றிருக்கிறீர்கள் என்று அறிந்து கொள்வீர்கள். நீங்கள் சரியான காரியத்தை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஏனெனில் அது வார்த்தை உறுதிப்படுதலாக அமைந்துள்ளது. பாருங்கள்? ஓ, எப்படி... நான் வருந்துகிறேன். நான்... சரி. 53மோசே வித்தியாசமாக நடந்து கொண்டான். மோசே செய்த கோமாளித்தனமான செயலைப் பாருங்கள். நீங்கள் தேவனுடைய சத்தத்தை பின்பற்றுவீர்களானால், நீங்கள் உலகத்துக்கு பயித்தியக்காரராக காணப்படுவீர்கள். அடுத்த நாள் மோசே தன் மனைவியை கழுதையின் மேல் ஏற்றினான். அவளுடைய இடுப்பில் குழந்தை இருந்தது. குழந்தையை இடுப்பில் தூக்குவது நமது தென்பாகத்திலுள்ளவர்களின் வழக்கும். அவர்கள் புறப்பட்டு சென்றனர். இந்த கிழவன் இப்படி தாடி தொங்கினவனாய், அவனுடைய வழுக்கை மண்டை பிரகாசிக்க, கையில் ஒரு கோலைப் பிடித்துக் கொண்டு கழுதையை நடத்திக் கொண்டு அவனால் இயன்றவரை எகிப்தை நோக்கி வேகமாக சென்றான். யாரோ ஒருவர், ''மோசே, எங்கே போகிறாய்?'' என்று கேட்டார். “எகிப்தை கைப்பற்ற அங்கு போகிறேன்''. அவன் இளைஞனாயிருந்த நாட்களில், இராணுவ வீரனாயிருந்த நாட்களில், அவன் முயற்சியில் தோல்வி கண்டான். ஆனால் இப்பொழுதோ அவன் கைப்பற்ற அங்கு சென்று கொண்டிருந்தான். அவன் அதை கைப்பற்றினான். ஏன்? அவன் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு, தன்னுடைய நாளில் காரியங்கள் என்னவாக இருக்கப்போகிறதென்றும், அது தன்னுடைய நாளிலே உறுபடுத்தப்படுவதையும் அவன் கண்டான். அவன் அதைக் கண்டான். 54பரிசேயன் என்று தன்னை அழைத்து கொண்ட பவுல் அவனால் முடிந்த வரைக்கும் வேதசாஸ்திரத்தினால் நிறைந்திருந்தான். ஆனால் ஒரு நாள் அவன் தேவனுடைய சத்தத்தைக் கேட்டான். அவன் அக்கினி ஸ்தம்பத்தை கண்டு, ஏதோ வித்தியாசமான ஒன்றுண்டு என்பதை அறிந்து கொண்டான். அது அவன் வாழ்க்கையை மாற்றினது. எத்தனை பரிசேயர்களும் எத்தனை கமாலியேல்களும், மற்றொவரும் பவுலிடம், “நீ செய்வது தவறு, நீ செய்வது தவறு'' என்று சத்தமிட்டாலும் அவன் கவலை கொள்ளவில்லை. பவுல் தேவனுடைய சத்தத்தைக் கேட்டபொழுது, அது சத்தியம் என்பதை அறிந்து கொண்டான். பேதுரு தன்னாலானவரை மதாபிமானமுள்ளவனாய் முன்னோர்களின் பாரம்பரியங்களைக் கடைபிடித்து வந்தான். அவன் மாம்சம் புசிக்க மறுத்தான். ஆம், ஐயா அதனுடன் அவன் எவ்வித தொடர்பும் கொள்ள விரும்பவில்லை. அவன் உண்மையில் ஒரு வார்த்தையும் கூட பிசகாமல், முன்னோர்களின் பாரம்பரியங்களைக் கடைபிடித்து வந்தான். என்ன நேர்ந்தது? ஒரு நாள் அவன், ''நான் சுத்தமாக்கினவைகளைத் தீட்டாக எண்ணாதே“ என்று கூறின தேவனுடைய சத்தத்தைக் கேட்டான். அவன் மாற்றத்தை அடைந்த மனிதனாகிவிட்டான். கர்த்தர் அவனை அனுப்பும் எந்த இடத்திற்கும் அவன் போக ஆயத்தமானான். 55முடிக்கப் போகும் நேரத்தில் இதை கூற விரும்புகிறேன். ஒரு சமயம் விசுவாசியான ஒரு மனிதன் இருந்தான். அவர் மரித்து நான்கு நாட்களாகிவிட்டன. அவன் கல்லறையில் நாற்றமெடுத்து அழுகிக் கிடந்திருந்தான். ஆனால் அவர் “லாசருவே, வெளியே வா'' என்று உரைத்த தேவனுடைய சத்தத்தைக் கேட்டான். மரித்து அழுகிப் போன ஒரு மனிதனை அது உயிரோடு வெளியே கொண்டு வருமானால், இன்னும் உயிரைப் பெற்றுள்ள சபைக்கு அது என்ன செய்யும்? அது நாம் பேசிக்கொண்டிருந்த எல்லா சத்தங்களின் குழப்பத்திலிருந்து - மதசம்பந்தமான, அரசியல் சம்மந்தமான, மற்றும் ஹாலிவுட் சத்தம், இப்பொழுது காணப்படும் கள்ளத் தீர்க்கதரிசனம் முதலிய குழப்பத்திலிருந்து - அவர்களை உயிரோடெழுப்பும். அவை அனைத்தின் மத்தியிலும், உண்மையான தேவனுடைய சத்தம், பாவத்தினாலும் அக்கிரமங்களினாலும் மரித்துள்ள ஒரு மனிதனை கூப்பிட்டு உயிரோடெழுப்பும். அது பின்வாங்கிப் போன ஒரு சபையை கூப்பிட்டு, அதை உயிரோடெழுப்பும். நிச்சயமாக! 56முடிக்கும் தருணத்தில் இதை நினைவில் கொள்ளுங்கள். இதை கூறி முடித்து விடுகிறேன். “பிரேதக் குழிகளிலுள்ள அனைவரும் தேவனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்'' என்று இயேசு கூறினார். அதை நீங்கள் கேட்கப் போகிறீர்கள். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், அதை எப்படியும் கேட்கப் போகிறீர்கள். பிரேதக் குழியிலிருந்து வெளிவரும் சிலர் ஆக்கினை அடைவார்கள். அவர்கள் சத்தத்தைக் கேட்பார்கள். ஆனால் அது ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுத்தும். இன்று அந்த சத்தத்தை நீங்கள் கேட்பீர்களானால்; ”இன்று, நீண்ட காலத்துக்குப் பிறகு, என் சத்தத்தைக் கேட்பீர்களாகில், சோதனை நாளில் நடந்தது போல, உங்கள் இருதயத்திதைக் கடினப்படுத்தாதேயுங்கள்''. பெந்தெகொஸ்தே மக்களாகிய நீங்கள் வெவ்வேறு குழுக்களை ஏற்படுத்திக் கொண்டு, மீண்டும் கோட்பாடுகளுக்குச் சென்று, உலகப் பிரகாரமாக நடந்து கொண்டு, “தேவபக்தியின் வேஷத்தை தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயிருந்தால்”, உயிர்த்தெழுதலின் போது நீங்கள் உயிரோடெழுந்து ஆக்கினை அடைவீர்கள். ஏனெனில் இப்பொழுது உங்களுடன் வார்த்தையின் மூலம் பேசிக் கொண்டிருக்கும் தேவனுடைய சத்தம் அந்நாளில் உங்களை ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுத்தும். 57நீ வெதுவெதுப்பான கிறிஸ்தவனாயிருந்தால், இன்று காலையில் தேவனுடைய சத்தம் உன் இருதயத்தில், “நீ வெது வெதுப்பான கிறிஸ்தவனாயிருக்கிறாய்'' என்று சத்தமிடுகிறது. நீ மனந்திரும்புவது நல்லது. கிறிஸ்துவுக்காக ஜீவிக்காத மனிதனே, பெண்களே. பையனே, பெண்ணே, தேவனுடைய சத்தம் அவருடைய வார்த்தையின் மூலம் உன்னுடன் பேசி, ''அப்படி செய்வதை நிறுத்திவிடு'' என்று கூறும்போது, அதற்கு கீழ்ப்படிவது நல்லது. ஏனெனில் மறுபடியும் ஒரு நாள் அந்த சத்தத்தை நீ கேட்பாய். அது உன்னை ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுத்தும். அது உன்னுடன் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கிறது. அதை நீ மறுக்க முடியாது. அது ஒலிப்பதிவு செய்யப்படுகிறது என்பதை நினைவில் கொள். ஆனால் சரியானதை செய்து அவருடைய சத்தத்தை கேட்பவர்கள், நீதியில் உயிரோடெழுந்து, மகிமைக்குள் பரலோகத்தில் பிரவேசிப்பார்கள். 58ஆகவே என்றாவது ஒரு நாள் நீங்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்கப் போகிறீர்கள். ஒருவேளை இன்று காலையில், உன் வழியை விட்டு நீ தேவனிடம் திரும்ப வேண்டும் என்று அது உன் இருதயத்தில் மெதுவாக பேசக்கூடும். உன் இருதயத்தில் பேசும் அந்த சத்தத்தை அவர்கள் பரலோகத்தில் ஒலிப்பதிவு செய்கின்றனர் என்பதை நினைவில் கொள். என்றாவது ஒருநாள் இயேசு கூப்பிடும்போது பிரேதக் குழிகளிலுள்ள அனைவரும் - நன்மை செய்தவர்களும், தீமை செய்தவர்களும் எழும்புவார்கள். இப்பொழுது நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கும் இதே சத்தம் அப்பொழுது, ஒரு குறிப்பிட்ட ஞாயிறு காலையில் அரிசோனாவிலுள்ள பினிக்ஸில்,போதகர் நீண்ட நேரம் உங்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, தேவனுடைய சத்தத்தைக் குறித்து பேசின போது, நான் உன்னிடம் பேசினேன்; பெண்களாகிய உங்களிடம், நீங்கள் தலைமயிரை நீளமாக வளர்க்க வேண்டுமென்றும், அவலட்சணமான உடைகள் உடுத்துவதை விட்டு விட வேண்டுமென்றும்; ஆண்களாகிய உங்களிடம், நீங்கள் பொய் சொல்வதையும், புகைபிடிப்பதையும் விட்டுவிட வேண்டுமென்றும், போதகர்களாகிய உங்களிடம் நீங்கள் தேவனுடைய வார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்றும் கூறினேன் அல்லவா?'' என்று மிருதுவான குரலில் உங்களிடம் பேசும். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? அது உண்மை. அந்த மெல்லியசத்தம், “அது உண்மை” என்று கூறும். 59நான் நிக்கொதேமுவைப் போல் வரவேண்டியதாயிருந்தால், அப்பொழுதும் நான் அங்கு அடைய முயற்சிசெய்வேன். நான் அவரிடம் வந்து, இந்த வனாந்தரத்தில் எங்காகிலும் சென்று, ''கர்த்தராகிய தேவனே, இதோ இங்கிருக்கிறேன். என்னை இப்பொழுது மாற்றும் உம்மைப் போல் என்னை வளர்ப்பியும்'' என்று கூறுவேன். வார்த்தைக்குத் திரும்புங்கள். நீங்கள் எங்காகிலும் வார்த்தையை விட்டு விலகியுள்ளதைக் கண்டால், உடனே அதற்கு திரும்பி வாருங்கள். ஏனெனில் ஒரு சங்கிலி அதன் மிகவும் பலவீனமான இணைப்பில் (link) மிகவும் பலமாய் உள்ளது. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தேவனுடைய கட்டளையை எங்காகிலும் விட்டுவிலகி, பாரம்பரியத்தை சேவித்துக் கொண்டிருந்தால், நீங்கள் மற்ற காரியங்களில் எவ்வளவாக உறுதியாயிருந்த போதிலும், அந்த இடத்தில் உங்கள் சங்கிலி அறுந்துவிடும். தேவனுடைய மாறாத கரத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். 60நாம் ஜெபம் செய்வோம். கர்த்தாவே, நீண்ட காலத்துக்குப் பிறகு, இன்று நீர் பேசப் போவதாக கூறினீர். உமது கற்பனைகளை எங்கள் இருதயமாகிய கற்பலகைகளில் எழுதிவைப்பதாக கூறினீர். எனக்கு முன்னால் என்ன உள்ளதென்று நான் அறியேன். எனக்குச் செய்யத் தெரிந்த ஒன்றே ஒன்று, உமது வார்த்தையை எடுத்து அதை பரப்புவதே. நிச்சயமாக அது சில கற்பாறைகளின் கீழ் எங்காவது விழும். தேவனே, நீர் ஒவ்வொரு இளைஞருடனும் நடுத்தர வயதுள்ளோரோடும், முதியோரோடும் - அது யாராயிருந்தாலும் - அவர்களுடன் பேச வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். கர்த்தாவே, என் இருதயத்தில் பேசும். இந்த போதகர்களின் இருதயங்களில் பேசும். சபையோரின் இருதயங்களில் பேசும். பிதாவே, இன்று உம்முடைய சத்தத்தை கேட்க வேண்டுமென்று ஜெபிக்கிறோம். சாமுவேலின் நாட்களில் பிரத்தியட்சமான தரிசனம் அபூர்வமாயிருந்தது. அது ஜனங்களுக்கு திகைப்பூட்டியது. அது இன்றைக்கும் அவ்வாறேயுள்ளது. எங்களுக்கு சொப்பனமும் சொப்பனக்காரர்களும், பேச்சாளர்களும், மொழி பெயர்ப்பாளர்களும் உள்ளனர். ஆனால் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு பிரத்தியட்சமான தரிசனம் புறப்பட்டு வந்து ஜனங்களைத் திருத்துவதென்பது... பரலோகப் பிதாவே, “கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணுங்கள்'' என்று வனாந்தரத்திலே கூப்பிட்ட அதே சத்தத்தை பரிசுத்த ஆவியானவர் தாமே மறுபடியும் அருளி, ”கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தம் பண்ணுங்கள்'' என்று உரைப்பாராக. இது எவ்வளவு வினோதமாயுள்ளது. ஏனெனில் அதை மரத்து போகச் செய்து, எடுத்துப் போட, வேறு பல சத்தங்கள் உள்ளன. ஆனால் அதை கேட்பவர்களின் காதுகளுக்கு அது அருமையாயுள்ளது. பரிசுத்த ஆவியானவர் தாமே எங்கள் எல்லோருடைய இருதயங்களிலும் கிரியை செய்ய வேண்டுமாய் ஜெபிக்கிறோம். 61நமது தலைகள் வணங்கியிருக்கும் இந்நேரத்தில் நமது இருதயங்களும் வணங்கியுள்ளன என்று நம்புகிறேன். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எங்காவது கீழ்ப்படியாமலிருந்திருக்கிறீர்கள் என்று அறிந்திருப்பீர்களானால், நீங்கள் வேத வாக்கியங்களை அறிந்திருந்து, நீங்கள் அந்த வேத உபதேசத்துடன் ஒத்துழைக்காமல், ஹாலிவுட்டின் சத்தம் போன்ற ஏதோ ஒன்று நீங்கள் வித்தியாசமாக நடந்து கொள்ளும்படி செய்திருந்தால், போதகர்களாகிய நீங்கள் சத்தியம் என்று அறிந்தள்ள ஒரு பாகத்தை வேதத்தில் கண்டு, அதை நீங்கள் போதித்தால் உங்கள் ஸ்தாபனம் உங்களை புறம்பாக்கும் என்று அறிந்திருப்பீர்களானால்; தவறான காரியங்களை எடுத்துக்கொண்டு தவறான வாழ்க்கை வாழும் உங்களுக்கு; உங்கள் பிள்ளைகளை திருத்த முயற்சி செய்யாமல், அவர்களை சரியான வளர்ப்பில் வளர்க்காத பெற்றோர்களாகிய உங்களுக்கு, உங்களால் இயன்றவரை நீங்கள் முயற்சி செய்தும் - அவர்கள் உலகப்பிரகாரமாக நடந்து கொள்ளுகின்றனர், அவர்களுக்கு நீங்கள் எடுத்துகாட்டாக இல்லாமலிருந்தால், உங்கள் அனைவரிடமும் தேவனுடைய சத்தம் பேசி, ''அப்படி செய்யாதீர்கள்'' என்கிறது. 62எல்லா தலைகளும் வணங்கி எல்லா கண்களும் மூடியிருக்கும் இந்நேரத்தில், பசி கொண்டவர்களாய், அவர்கள் எங்கே தவறு செய்துள்ளனர் என்று ஆராய்ந்து பார்க்கும் ஒவ்வொருவருடைய இருதயத்தையும் பரலோகத்தின் தேவன் தாமே நோக்கிப் பார்ப்பாராக. தேவனிடம் கரத்தைஉயர்த்தி, “கர்த்தாவே, உமது சத்தம் எல்லா அவிசுவாசத்தையும், உம்மைப் போல் இல்லாத எல்லா காரியங்களையும் அகற்றி, நான் எப்படி இருக்க வேண்டுமென்று நீர் விரும்புகிறீரோ, அந்நிலைக்கு என்னை மாற்றி அமைக்க வேண்டுமென்று வாஞ்சிக்கிறேன்'' என்று சொல்லுங்கள். உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா? இப்பொழுது நீங்கள்... கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. மற்ற சத்தங்கள் அனைத்தும் இருந்த போதிலும், “ஒருவன் என் சத்தத்தைக் கேட்டால்'' என்று இயேசு வேதாகமத்தில் கூறியுள்ளார். அவரை நீங்கள் பின்பற்றினால், நீங்கள் விரும்புவதை பெற்றுக் கொள்வீர்கள். 63கர்த்தாவே, நேரம் விரைவாக கடந்து கொண்டிருக்கிறது. ''விசுவாசித்தவர்கள் அனைவரும் ஞானஸ்நானம் பெற்றார்கள்'' என்று வேதம் கூறுகிறது. பரலோகப் பிதாவே, தாங்கள் படித்த தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாய் தவறாக நடந்து கொண்டதாக உண்மையான அறிக்கை செய்து கைகளையுயர்த்தின ஒவ்வொருவருக்காவும் ஜெபிக்கிறேன். அவர்களில் பாதி பேரைக் கூட நான் காணவில்லை, நான் காண வேண்டுமென்று அவசியமில்லை. கர்த்தாவே, காணவேண்டியவர் நீரே. உயர்த்தப்பட்ட கரத்துக்கு பின்னால் உள்ள நோக்கத்தையும் குறிக்கோளையும் நீர் அறிந்திருக்கிறீர். அவர்கள் தாமே இந்த நேரம் முதற்கொண்டு, ''இன்று முதல் நான் தேவனுடைய வார்த்தையை, தேவனுடைய சத்தத்தை ஏற்றுக் கொண்டு அதற்கான கிரயம் எதுவானாலும் அதை பின்பற்றுவேன்'' என்று தங்கள் இருதயங்களில் தீர்மானிப்பார்களாக. அவர்கள் செல்லும்போது, ''இயேசு சிலுவையை தனியாய் சுமந்து, முழு உலகமும் சும்மா இருக்க வேண்டுமா? இல்லை, ஒவ்வொருவருக்கும் ஒரு சிலுவை உண்டு; எனக்கும் ஒரு சிலுவை உண்டு. மரணம் என்னை விடுதலையாக்கும் வரைக்கும், பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த சிலுவையைச் சுமப்பேன்“ என்னும் அந்த கவிஞனின் பாடலை நினைவில் கொள்வார்களாக. ''பிறகு தேவனுடைய சத்தம் பேசும்போது, அவருடைய நீதியில் நான் உயிரோடெழுவேன். ஏனெனில் அவருடைய சத்தத்தை - அவருடைய வார்த்தையின் சத்தத்தை - நான் பின்பற்றினேன்''. கர்த்தாவே, அவர்களை இப்பொழுது உம்மிடம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சமர்ப்பிக்கிறேன். 64நமது தலைகள் வணங்கி, நீங்கள் பாவ அறிக்கைகளையும் ஆணைகளையும் செய்து கொண்டிருக்கும் இந்நேரத்தில், தலையை சுற்றுமுற்றும் திருப்பும் ஒரு சிறுவனைக் குறித்து நான் ஆச்சரியப்படுகிறேன். ''உன் நோய்களையெல்லாம் குணமாக்கும் கர்த்தர் நானே“ என்னும் தேவனுடைய சத்தம் சபைக்கு அருளப்பட்டுள்ளது. சபையில் இருக்கின்ற சத்தம் அது தான். சுகம் பெற அவசியமுள்ள நீங்கள் யாவரும்; தேவனுடைய வார்த்தை ஒவ்வொன்றுக்கும் பிரதிஷ்டை செய்யப்பட்ட வாழ்க்கையைக் கடைபிடித்து, நீங்கள் சரியென்று அறிந்துள்ள ஒவ்வொன்றையும் நீங்கள் செய்திருந்து, உங்களுக்கு சுகம் தேவைப்பட்டால், உங்கள் கைகளையுயர்த்துங்கள். ''கர்த்தாவே, எனக்கு சுகம் தேவையுள்ளது'' என்று கூறி கைகளையுயர்த்துங்கள். சரி. இப்பொழுது, ''உன் நோய்களையெல்லாம் குணமாக்கும் கர்த்தர் நானே'' என்னும் அந்த சத்தத்தை உங்கள் இருதயத்தில் பதித்துக் கொள்ளுங்கள். வார்த்தை உரைக்கப்பட்டிருந்தால் அது நிறைவேறியே ஆக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ''எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொல்லி, தான் சொன்ன படியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும்'' என்று இயேசு மாற்கு 11:22ல் கூறியுள்ளார். 65இப்பொழுது ஒவ்வொருவரும் தலைவணங்கி, உங்கள் சொந்த வழியில் அறிக்கை செய்யுங்கள். “கர்த்தாவே, உமது வார்த்தையை நான் விசுவாசிக்கிறேன். நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறீர் என்று உரைக்கும் உம்முடைய சத்தத்தை நான் கேட்கிறேன். நான் இப்பொழுது கீழே நடந்து சென்று இந்த குழந்தையின் மேல் கைகளை வைக்கப் போகிறேன். ஏனெனில் இது என்னவென்று அறிந்து கொள்வதற்கு அவன் மிகச் சிறியவன். விலையேறப்பெற்ற சிறு பையன், என் மகன் ஜோசப்பின் அளவும் வயதும் கொண்டவன். நீங்கள் எல்லோரும், ''கர்த்தாவே, உம்முடைய சத்தத்தை நான் கேட்கிறேன். நான் விசுவாசிக்கிறேன்'' என்று ஜெபித்துக் கொண்டிருங்கள். 66பரலோகப்பிதாவே, சரீர சுகத்திற்காக இந்த கூட்டத்தினரை உம்மிடம் கொண்டு வருகிறேன். கர்த்தாவே, இங்கு ஒரு சிறு பையன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். செய்தி முழுவதிலும் அவன் என் கவனத்தை கவர்ந்து கொண்டிருந்தான். அவனுடைய தாய் அங்கு அவனைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். மருத்துவ விஞ்ஞானத்தின்படி, அந்த சிறுவன் சுகம் பெறுவான் என்னும் நம்பிக்கையில்லை. ஆனால் இவையெல்லாவற்றிற்கும் மேலாக தேவனுடைய சத்தம் ஒன்றுண்டு. எனக்கு செய்யத் தெரிந்த எல்லா கட்டளைகளையும் நானும் சபையும் ஒன்று சேர்ந்து செய்துவிட்டோம். பிதாவே, மற்றவை நீர் செய்யவேண்டியதே. நான் நடந்து சென்று என் கைகளை அந்த பிள்ளையின் மேல் வைக்கிறேன். பிதாவே, தேவனே, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் இதை கடிந்து கொள்கிறேன். தேவனுடைய வல்லமை, தேவனுடைய சுகமளிக்கும் வல்லமை... அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் அவனுடைய நிலைமையில் வித்தியாசம் ஏற்படட்டும். அவர்கள் எல்லோரும் உம்முடைய மகிமைக்காக தேவனிடம் வருவார்களாக, பரலோகப் பிதாவே, நீர் வாக்கருளியிருக்கிறீர். அவ்வளவு தான் எனக்குத் தெரிந்தது. நீர் வாக்கருளியிருக்கிறீர். அது நிறைவேறிவிட்டது. “இதை பார்த்து நீ சொல்வாயானால்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திலுள்ள மக்களை கட்டியிருக்கும் வியாதியுண்டாக்கும் ஒவ்வொரு பிசாசையும், அவிசுவாசத்தின் ஆவியையும், ''இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இவர்களை விட்டு அகன்று போ'' என்று கட்டளையிடுகிறேன். அது எழுதப்பட்டுள்ளது என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். இப்பொழுது அது சொல்லப்பட்டுவிட்டது. தேவனுடைய நாமத்தின் கனத்துக்கும் மகிமைக்கும் அது நிறைவேறுவதாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அது கேட்கப்பட்டுவிட்டது. 67விசுவாசிக்கக் கூடிய நீங்கள், விசுவாசிக்கிறவர்களாகிய நீங்கள், என்ன நேர்ந்த போதிலும் கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை. விதை அங்கு விதைக்கப்பட்டுவிட்டது. உங்களுக்குள் இருக்கும் அந்த ஒன்று, அந்த சத்தம். இந்த குழந்தையின் தாயே, அவனுடைய நிலை எதுவாயிருந்தாலும், தேவனுடைய வித்து உங்கள் இருதயத்தில் விழுந்துவிட்டதென்றும், “என் வியாதி போய் விட்டது'' என்றும் விசுவாசிக்கிறீர்களா? விசுவாச ஜெபம் உங்களுக்காக ஏறெடுக்கப்பட்டுவிட்டது. அந்த கம்பத்தை அங்கு நாட்டுங்கள். சாத்தான் எப்பொழுதாவது முயற்சி செய்தால், நீங்கள் திரும்பி வந்து, ''அந்த ஞாயிறு காலையில், நான் ஸ்பானிஷ் சபையில் நின்று கொண்டிருந்தபோது, எனக்காக விசுவாச ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. தேவன் வாக்களித்திருக்கிறார்'' என்று கூறுங்கள். ''விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்.'' அது நிறைவேற வேண்டும். அதை விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் ”ஆமென்“ என்று சொல்லுங்கள். தேவன் ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது ஆராதனையை சகோ. ரோஸ் அவர்களிடம் ஒப்படைக்கிறேன். அவர் இங்கிருக்கிறார் என்று நினைக்கிறேன். சகோ. ஜூவல் ரோஸ்.